வரையறுக்கப்படா எல்லைகள்

அன்பு செய்வோம்
நட்பு வட்டங்களைத் தாண்டி

உதவி செய்வோம்
பலனைத் தேடாமல்

இன்சொல் உரைப்போம்
நம்மை விரும்பாதவர்களிடமும்

புன்னகைப்போம்
நமது முட்டாள்தனங்களைப் பார்த்து

உடைத்து எரிவோம்
நம்மை குறுகளாக்கும் எண்ணங்களிலிருந்து

நமது ஆளுமை, நம்பிக்கை சிறகுகளோடு பறக்கத் துடிக்கிறது தத்தித் தத்தி.

சிறகுகளை தயவுசெய்து முறித்து விட வேண்டாம்

எழுதியவர் : ஜான் பிரான்சிஸ் (4-Oct-17, 11:28 am)
பார்வை : 199

மேலே