மீள முடியா சாபம்

என் மீதான கோபத்தால்
உன் இதழ் கடக்காமல்
சிக்கி தவிக்கும் வார்த்தைகளினால்
பிரசுவிக்கும் மெளனங்களின்
வலி புரிகிறது எனக்கு
உன் மீதான அன்பினால்
என் இதழ் கடக்காமல்
சிக்கி தவிக்கும் வார்த்தைகளினால்
பிரசுவிக்கும் மெளனங்களின்
வலி புரியாதா உனக்கு
நீ பேசா நொடிகள் போல்
நீ கேட்கா நொடிகளும்
மீள முடியா சாபம் தான்
இப்பிரபஞ்சத்தில் எனக்கு...
→பாரதி நீரு←

எழுதியவர் : பாரதி நீரு (4-Oct-17, 7:23 pm)
பார்வை : 282

மேலே