தாமதம் எனக்கு சம்மதம்

அதற்குள் வந்துவிட்டதே
பள்ளி கட்டண நாள்!!
தாமதித்து வந்திருந்தால்
தகப்பனுக்கு சந்தோசம்!!

அதற்குள் கிழிந்துவிட்டதே
அம்மாவின் சேலை
தாமதித்து கிழிந்திருந்தால்
தாய்க்கு சந்தோசம்!!!

அதற்குள் தீர்ந்துவிட்டதே
ஐம்பது ரூபாய் இருமல் மருந்து
தாமதித்து தீர்ந்திருந்தால்
பாட்டிக்கு சந்தோசம்!!

கொஞ்சம் பொறுத்திருந்தால்
கிழிக்காமல் வந்திருக்கும் அண்ணன் குழந்தை
தாமதித்து பிறந்திருந்தால்
அண்ணனுக்கு சந்தோசம்!!!

அதற்குள் நிரைத்துவிட்டதே
அக்காவின் தலைமுடி
திருமணம் ஆனபின் நிரைத்திருந்தால்
அவளுக்கு சந்தோசம் !!

இப்படி சாமானிய மக்களை
சந்தோஷப்படுத்தும்
தாமதம் எனக்கு சம்மதம்!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (6-Oct-17, 5:03 pm)
பார்வை : 107

மேலே