பள்ளி காதல்
திரும்ப கிடைக்காத திருவிழா காலம் அது -
வழக்கமான மழை,வானவில்,பட்டாம்பூச்சிகள் ,வண்ண பூக்கள்,
மேலும் அதீத அழகாக தெரிந்த தருணம்.
முதல் பார்வையின் மயக்கம், முதல் வார்த்தையின் தயக்கம்,புத்தக நடுப்பக்கம் -அவள் பெயர் என் பெயர்
பார்வையின் தவம்,
அவள் புன்னகை வரம்.
அவள் இரட்டை ஜடை
ஒன்றில் இதய ஊஞ்சல்,
மற்றோன்றில் இளமை தூக்கு.
-தீர்ந்து போன காலம் அது ,
ஈர்ப்பின் பருவ துருவம்,
வடக்கு அவள், தெற்கு நான்,
வடக்கு வாழ்ந்து, தெற்கு தேய்ந்த கதை .
முப்பொழுதும் அவள் முகம் தேடும் ,
என் விழி, இதயம், உயிர் எல்லாம் பின் செல்ல -
திருவிழாவில் எனை நானே தொலைத்த கதை
காதல் யாகத்தில் என் வாழ்வு பலியாக,
, எரியும் அந்த நினைவில் விழுந்து இறந்து மீண்டும் பிறக்கிறேன்,ஒரு பீனிக்ஸ் போல.
நிறைய கற்று கொடுத்தது விட்டது காதல் ,
இது சரியென சிலர் தவறென சிலர்,
என்னிதயம் அறிந்த வரை
எல்லோரும் கடந்து போன , இனிய அழகான தவறு அது,
-இப்படிக்கு கொஞ்சம் புன்னகையுடன்
நிறைய கண்ணீருடன் நாம்.