துணை வருவாய்
சிறகு விரித்தே செலும்வழி எங்கிலும் தேடுகிறேன்
துறந்தேன் உறக்கம்; துயரால் வதங்கித் துடிதுடித்தேன்
உறவே! உயிரே! உருகியே உன்னால் உடல்மெலிந்தேன் !
மறந்தேன் எனையே வருவாய் விரைவிலென் மன்னவனே !
( கட்டளைக் கலித்துறை )
சியாமளா ராஜசேகர்