காத்திருப்பேன் உயிரோடுள்ளவரை

உன் பிரிவை தாங்காதே
என் கண்கள் தூங்காதே
காதல் என்னும் கனவு கண்ட
நெஞ்சம் என்றும் மாறாதே
மறக்க சொல்லாதே
என்னை இறக்க செய்யாதே

முதல் பார்வையில் முழுதும் தொலைந்தேன்
மிச்சம் மீதி எங்கே இருந்தேன்
அச்சமின்றி காதல் சொல்ல
ஒற்றை வார்த்தை தேடி அலைந்தேன்
புலம்பலுக்கு உருவம் கொடுத்து
கவிதை என்று பேரும் வைத்தேன்
ஒரு கவிஞன் ஆனேன் உன்னாலே
உன்நிழலை கேட்டால் சொல்லும் தன்னாலே

காதலுக்கு எதிரியென ஆயிரம் பேர் வந்திடலாம்
சாவதற்கு உறுதியென வாக்குறுதி தந்திடலாம்
உன் நேசம் நிஜமென்றால் அத்தனையும் ஜெய்திடலாம்
பெண்ணேசம் பொய்யென்றால் கல்லறையில் எழுதிடலாம்
சொல்லடி என் காதல் எந்த வகை ??
காத்திருப்பேன் உயிரோடுள்ளவரை

எழுதியவர் : ருத்ரன் (9-Oct-17, 10:37 pm)
பார்வை : 733

மேலே