அன்பு தேவதை

கதிரவன் கண்சிமிட்டி வீட்டிற்குள் வரும் அதிகாலை நேரம்
கன்னத்தில் ஈரம் பட்டு கண்விழித்தேன்!
அன்பு மகள் அமைதியாக என்னெதிரில்,
ஏனடி கன்னத்தில் எச்சில் செய்தாய் என்கிறேன்...
லூசு அப்பா நான் முத்தமிட்டேன் என்கிறாய்....
நீ முத்தமிட்ட கன்னம் உன் அம்மாவிற்கு சொந்தம் என்கிறேன்.....
இல்லை இல்லை இந்த அழுக்கு முகம் எனக்கு மட்டுமே என்கிறாய்.....
இதயத்தில் இருக்கும் என்னவளை என்ன செய்வாய் என்கிறேன்.....
அவளை இறக்கிவிட்டு உன் உயிரில் கலந்துவிடுவேன் என்கிறாய்....
உன் அம்மாவிற்கு தெரிந்தால் உனக்கு அடி விழுவது உறுதியென்கிறேன்.....
அடியும்,உதையும் உனதளவில் வைத்துகொள்ள சொல்.....
என்னில் உன்னவள் காரம் நீட்டி அடித்தால்..............
உன்னை நான் கால் நீட்டி உதைப்பேன் என்கிறாய்.......
ஏனடி அன்பு மனைவியே உனது வார்த்தைஜாலம் அனைத்தையும்
குறைவின்றி கற்று கொடுத்துவிட்டாயோ கள்ளியே என்கிறேன்....
ம்கும்!!! அடித்து அழவைத்து அரவணைக்கும் வித்தையை
முழுவதும் மிச்சமின்றி கற்று உமக்கு தப்பாமல் பிறந்ததை விடவா
என் அன்பு கணவரே என்கிறாள் அவள்.....
காலை நேர காதலை ஆரம்பிச்சிடாங்க
ஆளைவிடுங்க சாமிகாளா நா ஓடிருறேன் என்றபடி
துள்ளிகுதித்து ஓடுகிறது நாங்கள் பெற்ற தேவதை!!!!
காதலுடன் நண்பன் ***சரவணக்குமார்***

எழுதியவர் : (10-Oct-17, 10:32 am)
Tanglish : anbu thevathai
பார்வை : 256

மேலே