வலி கொண்ட இதயம்

மனதோடு உறவாடி
கவியுடன் கதைபேசி
காதலோடு கைகோர்த்து
நடைபயின்ற நாட்களும்,,,,,,
நிராகரிப்பின் வலிகளும்
காத்திருப்பின் சுகவேதனைகளும்
முகதரிசனத்தில் மறையும்
நாள்பட்ட வலிகளும்
சிறு புன்னகையில் கவிழும்,,,,,
முரண்பட்ட உரையாடலும்
முரணான வார்த்தைகளும்
முடிவான பின்பும்
முடியாத காதலுடன்
நிறைவேறா கனவுகளும்
முடியும் என்ற வேளைதனில்
நிலைபெற்று
முற்றி வெடித்து
சிதறி விடுகிறது
வலிகளின் வடுக்களாய்
மாறிய
இதயம்,,,,,,!