நான் தனிமை

நான் மட்டும் இந்த வீட்டில் நான் அனாதை இல்லத்தில் வளர்ந்து வெளிவந்தவன் என்பதால் எனக்கென்று சொந்தங்கள் இல்லை இந்த வீடும் அதில் உள்ள பொருள்கள் மட்டுமே எனக்கு சொந்தம். இதுதான் என் வாழ்கை என்று இருந்த போது,

ஒரு முன் அந்தி பொழுது நான் நடைப்பயிற்சி செய்த நேரம்,

அவள் புன்னகை முகம் பார்த்து நின்றேன், அவளுடன் நான் இது வரை பழகவில்லை இருந்தும் அவளுடன் வெகு நாள் பழகிய ஒரு உணர்வு. அவள் என்னை பார்க்கவில்லை நான் மட்டும் அவளை பார்த்துக்கொண்டு நின்றேன். அன்றைய பொழுது அவள் நினைவில் கரைந்தது. அவளே என் அத்தனை சொந்தம் என்று அறிந்தேன்,....

பின் ஒரு வாரம், அவள் நினைவுடன், பார்த்த உடன் அவளை மட்டும் பிடித்தது எப்படி யோசித்தே நடந்தேன், அவளை முதல் முறை பார்த்த இடத்திற்கு. அவள் வரும் நேரம் பூக்களும் சிறகு விரித்து பறந்தது. இன்றும் நான் மட்டுமே அவளை பார்த்தேன் அவள் என்னை பார்க்கவில்லை. இப்படியே ஆறு மாதம் ஓட, என் காதலை சுமந்து அவளை தொடர்ந்தேன் அவள் விவரம் அறிந்தேன். அவள் பெண்கள் கல்லூரியில் 2 ம் ஆண்டு மாணவி அது முழு நேர கல்லூரி அதனால் அவளை அந்த நேரம் மட்டும் பார்க்க முடிவதில்லை. அவளை பார்க்க மனம் துடித்ததால் அவள் கல்லூரியில் அவள் வகுப்பில் பெண் உருவ வேஷம் செய்து சேர்ந்தேன். தவறு தான் இருந்தும் யாரும் இல்லா என் வாழ்வில் அவள் முகம் தரும் சொந்தம் என் மனதை சந்தோசம் செய்தது. அதனால் அவள் நட்புக்குள் என்னை சேர்க்க நான் இப்படி செய்தேன்.

அவளுடன் நட்பு கொண்டேன், அவளுடன் மட்டும் பேசினேன் அவளுடன் மட்டும் பழகினேன் ஒரு வரை முறையோடு. இப்படி சென்ற என் வாழ்வில், ஒரு நாள் அவள் தந்த செய்தி என்னை வாட்டியது. அவள் தந்தை நண்பன் மகனுடன் அவள் திருமண ஏற்பாடு என்று திருமண பத்திரிகை நீட்டினாள். மனம் கலங்கியது இருந்தும் மறைத்து புன்னைகைத்தேன். இரு வாரத்தில் அவள் திருமணம் நடந்தேறியது. என் வாழ்வில் அவள் இல்லை. என் வேஷம் கலைத்தேன் அவள் நினைவை மட்டும் கலைக்கவில்லை. என் காதலை சுமந்து மீண்டும் தனிமையில்.....

2 வருடம் முடிந்தது..

அன்று ஒரு நாள், அவளை நான் அலுவலகம் செல்லும் சாலையில் பார்த்தேன். மகிழ்ச்சியுடன் அவள் அருகில் போனேன், அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எப்படி தெரியும் நான் பெண் வேடத்துடன் இல்லையே. அவள் என்னை கடந்து சென்றால் ஆனால் அவள் முகத்தில் முன் இருந்த மகிழ்ச்சி இல்லை என்பதை மட்டும் உணர்ந்தேன். அவளை தொடர்ந்தேன் அவள் நிலையை அறிய. அவள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்வதை அறிந்தேன். அதன் பின் தெரிந்த விவரம் என்னை வாட்டியது. அவள் திருமணம் முறிந்து விட்டது அதனால் அவள் வேலை செய்கிறாள் என்று தெரிந்தேன். அவளை ஆறுதல் செய்ய மறுபடியும் பெண் வேஷம் கொண்டேன்.

அவளை சந்தித்தேன் அவள் திருமண உறவை சொன்னால், அந்த கசப்பான உறவில் இருந்து வெளி வந்து இந்த வேலையில் சேர்ந்ததாக சொன்னாள். பல சந்தேகம் கொண்ட அந்த மனிதனிடம் விடை பெற்று வீட்டை வெறுத்து தனியாக இங்கே இருப்பதாக சொல்லி அழுதாள், நான் அவளை ஆறுதல் செய்தேன். அவள் சோகங்களில் பங்கு கொண்டேன். அவள் மீண்டும் பழைய மகிழ்ச்சியான வாழ்விற்கு திரும்பினாள். இப்படியே 1 வருடம் செல்ல, நான் சொன்ன பொய்யும் என்னை நாளுக்கு நாள் வறுத்த அவளிடம் உண்மை சொல்லிட அவளை முதல் முறை பார்த்த இடத்திற்கு வர சொன்னேன்.

அவளிடம் நான் அனைத்தையும் சொன்னேன். என்னை அவள் முறைத்தாள். நான் உன்னை பிரிய மனமில்லாமல் இப்படி செய்தேன் என்று மன்னிப்பு கேட்டேன், உன்னை நான் நேசிக்கிறேன் அதனால் தான் இப்படி செய்தேன் என்று என் காதலை சொல்லும் போதே அவள் கோபத்துடன் என்னை விட்டு தூரமாக நடந்து சென்றாள்.

நான் அவளுக்காக என் காதலை சுமந்து ஏக்கத்துடன் காத்துகொண்டு இருக்கிறேன். என் காதல் அவள் ஏற்பாளா இல்லை வேண்டாம் என்று சொல்லிடுவாளா? ஏக்கத்துடன் நான்........

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Oct-17, 8:39 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : naan thanimai
பார்வை : 483

மேலே