இளைஞனே

இளைஞனே!

நயாகராவை
நகர்த்தி வைக்கும்
நெம்புகோல் இளைஞர்களின்
நம்பிக்கை நட்சத்திரமாவோம்.

தோல்வியைத் துரத்தி
விரக்தியை விரட்டி
பூமியைப் புரட்டும்
புதிய அணிக்குத்
தலைமை ஏற்போம்.

சிதறிக் கிடக்கும்
சக்தியைச் சேகரித்து
சிகர சமுதாயம்
சமைப்போம்.

மதம், சாதி கடந்த
மனிதநேய மனங்களை
மண்ணில் அமைப்போம்.

உழைப்பாளியின் வேர்வை
உலரும்முன்
கூலி கொடுக்கும்
முதலாளி(த்துவம்) இழைப்போம்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (12-Oct-17, 10:58 pm)
Tanglish : ilainyane
பார்வை : 1527

மேலே