முட்கள்
சுவையான மீனென்றால் ஆங்கே தான்
சுருக்கென தைக்கும் முள்ளு முண்டு
அவைவெளியில் தொட்டி யிலே அழகாய்
அமைந்துள்ள ரோசாவில் முள்ளிருக்கும்
சுவையூட்டும் மீன்குழம்பு ஊடேதான்
சின்னதாய் முட்களும் உண்டு தானே
இவையாவும் மிஞ்சுகின்ற முட்கள் தான்
”எழுந்திடுக” என்றேதான் இயம்பி நிற்கும்
பூமிதனில் பாதம்படும் போழ்திலே தான்
பொசுக்கென குத்துகின்ற நெருஞ்சி உண்டு
அமிழ்தான நீராகாரம் அருந்தும் போது
அவற்றிடை ”நெல்மணி” முள்ளா குமே!
குமிழாக குவிந்திருக்கும் பலூனை யே
குண்டுசி முள்கொண்டு உடைத்திட லாம்
கவிழ்ந்தே படுத்துறங்கும் சோம்பல் பேருக்கு
கசையடியாய் மாறுவது கடிகார முள்ளே!