கருவறை அத்யாயம்

கருவறை அத்யாயம்
கண்ட சிசு
குப்பைத்தொட்டியில்..

பசித்து அழுகிறது...
குற்றுயிராய் ஈனக்குரலில்
உயிரொன்று...

ஓர் ஐந்தரவு
நாவால்
தன் குட்டிகளை
நக்கிக்கொடுத்திட...
ஓர் ஆறறிவு செய்வது என்ன?

தொடக்கம் பிறப்பாகவும்...
முடிவு இறப்பாகவும் இருக்க
இங்கு பிறப்பே போராட்டமாய்...

பிறந்தோம் என்கிற
நிம்மதி இல்லை...
முடியவிருக்கும்
வாழ்க்கைக்கு
முகவரி தேடி...

போராடி வென்ற கருவறை
சுகம்....
கண் விழித்து பார்க்கும்
முன்பே கல்லறை பயணம்...

காதல் இல்லா காமம்
பயின்று...
காலன் கையில்
உயிரை கரைத்திடும்...
கேவல வர்க்கம்
இருக்கும் வரையில்...
கழிவறை அத்தியாயங்கள்
தொடரத்தான் செய்யும்...

உணரும் மனமோ
உயிர் கொடுத்து காத்திடும்!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Oct-17, 8:54 pm)
பார்வை : 124

மேலே