ஆப்பிள் மரங்கள் இல்லாத காஷ்மீர் இது

ஆப்பிள் மரங்கள் இல்லாத காஷ்மீர் இது
====================================

நானும் என் தனிமையும்
இப்படித்தான்
எப்போதும் பேசிக்கொண்டிருப்போம்,

உன் வருகையின் போது
இந்த இடம் எப்படி இருக்குமோ
அப்படித்தான்
அதுவும் நானும் பேசிக்கொண்டிருப்போம்,

இதை கேட்கும் போது,
உனக்கு ஆச்சர்யம் தோன்றலாம்,
இதை கேட்கிறபோது,
உனக்கு சிரிக்கவும் தோன்றலாம்,

நீ இச்சமயம்,
இங்கிருந்தால் எப்படி இருப்பாயோ
அப்படி அது இருக்கும்,

இதற்கு முன்னால்,
நீ இருந்தபோது எப்படி இருந்தாயோ
அது அப்படியும் இருக்கும்,

நானும் என் தனிமையும்
இப்படித்தான்
எப்போதும் பேசிக்கொண்டிருப்போம்,

இரவு,
என் தனிமையுடைய விரிந்த கருங் கூந்தல்,
இந்த தனிமை இருளில் தெரிவது,
நிலவொளியா
இல்லை உன் கண்பார்வையா ம்ம்,
அதோ தொலைவில் தெரிவது
நிலவுதானா
இல்லை கை வளைவியா,
இவை நட்சத்திரங்கள்தானா
இல்லை உன் குளிர்ப்போர்வையா,
இது காற்றுதானா
இல்லை உன் கைகளிலிருந்து வரும் நறுமணமா ம்ம்,

தென்றல் தாலாட்டும் இலைகள்,
ஏதேதோ சொல்லியபடியே இருக்கின்றன ,
அவை நினைத்திருக்கலாம்,
எப்போதும்
நான் ஏன் அமைதியாக இருக்கிறேன் என்று ம்ம்,
அதற்குத் தெரியும்,
அது இல்லாமல்,
இங்குள்ள யாருக்கும் எதிலும் பிடித்தமில்லை, என்று,

என் இதயம் சொல்கிறது,
என் தனிமை இங்கேதான் எங்கேயோ
என்னைச்சுற்றி ம்ம்,

கடினமான தருணங்கள் இங்கேயும் இருக்கின்றன,
இரவில், தனிமையும் கூட
அப்படித்தான்,
இன்னும் சொல்ல நிறைய இருக்கின்றன ம்ம் ,
யாரிடம் சொல்வேன்,
எதுவரை இந்த மௌனத்தை தாங்கிக்கொள்வேன்
தெரியவில்லை,

ஒரு புகார்
கொதிநிலையில் இருக்கும் உணர்வுகளின் அடர்த்தியைவிட,
குருதியின் நிறம்,
அவ்வளவு ஒன்றும் அடர்த்தியில்லை,
தற்காலம்
இவற்றை கடந்துதான் போகவேண்டும்,
சரி வா ம்ம் ,
நமக்கிடையே ஆன சுவர்களை உடைத்து விடலாம்,
இவ்வுலகிற்கு
சப்தமிட்டுச் சொல்லலாம்,
உன்னை நேசிப்பதை,

பூக்காரன் கவிதைகள்

எழுதியவர் : அனுசரன் (13-Oct-17, 5:26 am)
பார்வை : 87

மேலே