சாய்வு
அன்பு செய்தல் யாவர்க்கும் நன்றா?
அன்பு தானே மனஞ்சாய்க்கிறது!
அன்பு தானே அறிவு சாய்க்கிறது!
முடிவுகள் எடுக்கவிடாமல் அல்லாடவும்
முடிவுகளை மாற்றித் தொலைக்கவும்
நிர்ப்பந்திக்கும் போது
நீங்கள் கேள்விக் குள்ளாகிறீர்கள்.
தகுதியற்றவர் முந்திச் செல்லவும்
தகுதியுள்ளவர் பிந்தி நையவும்
அன்பின் முடிவுந்தான்?
அன்பு
சில கதவுகளைத் திறக்கிறது
சில கதவுகளை மூடிவிடுகிறது.