நினைவுகள்

என் நினைவுகள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை// என் நிழலான நினைவுகள் // என் மனத்தே நின்று//
என் நினைவு வாசனையை எழுப்பி விடுவதால்/
எனக்காக மறையாது புதைந்த உணர்வுகள் / /மலரத்தொடங்கியது//
இருளானது மெல்ல மெல்ல என்னை விட்டுச் சென்றாலும்// அவளோடு நான்
கொண்ட காதலால் //என்னை மறந்து
அவள காதல் என்னை கொன்றதால்//

ஆசையை வளர்த்து கருவறையில்// காலம் தன்னை கரைத்தேனே //

காதலின் அர்த்தம் தெரியாமலே//
எனக்கென பிறந்து வந்தவள் என //முற்றிலும் துறந்தேனே//

அதனால் எண்ணம் எல்லாம் அழகு பெற்று // வாழ்வெலாம் வாசமானதே//

வாசமான எண்ணங்களை எல்லாம் // மனதோரம் அடைகாத்து காத்திருந்த வேளையில்//

பிறந்த காதல் குழந்தை// வளர ஆசை கொள்கையிலே//
உன் வேசம் கலைந்து // என் நினைவு மறைந்து// உன் பாட்டில் நழுவி செல்கையில்

குழந்தை காதலின் சுவாசமும்// வலிமை குன்றி இறந்து போக //வேதனையில் மனம்

பிரிவை தாங்க முடியாது பட்ட ரணம் பிரிக்க முடியாத வலியாய் நிலையாகிப்
போனது

எழுதியவர் : காலையடி அகிலன் (15-Oct-17, 9:56 am)
Tanglish : ninaivukal
பார்வை : 197

மேலே