வெள்ளிநிலா விளக்கேற்றும்

வெள்ளிநிலா
விளக்கேற்றும்
நேரம்.....விழியெல்லாம்
வேதனையால்
ஈரம்.....விரட்டும்
துயரம்
மிரட்டிவிடு
அன்பே என்துயரம்
கொன்றுவிடு......!!

தனிமையின்
வடுக்களை
அடுக்கிக்கொண்டே
போகிறேன்.....
அடுத்தவர்
அனுதாபம்
பெறாமலே.....!!

அனுதாபத்தை
பெறுவதல்ல
வாழ்க்கை
அனுபவத்தை
பெறுவதே.....உன்
அன்பில்
என்னைத்
தொலைத்து
நிம்மதி
இழந்து
வாழ்கிறேன்.....!!

எழுதியவர் : thampu (20-Oct-17, 1:11 pm)
பார்வை : 180

மேலே