இவன் பிரிவை ஜீரணிக்காத என் ஆன்மா
உன் நட்பு இந்த நூற்றாண்டிற்கு கிடைத்த வரம் நண்பா
உன்னை சுவாசிக்க காற்றும் புதிதாய் சுவாசம் உணரும்
உன் மெண்மை குணமறிந்து
மலரென பனித்துளிகள் இரவில் உன்னை நாடும்
கோபமும் உன்னிடம் நட்பு கொண்டு அதன் குணம் மறந்து போகும்
நகரும் பொழுதுகளும் நாடி துடிப்பை நிறுத்திவிடும்
நீ இல்லாமல் நகரும் நொடிகளை சிந்தித்து பார்த்தாலே
உயிரும் உன் பிரிவை ஏற்காது பிரிந்தாலும் சில நொடிகளிலேயே
இறைவனிடம் வரம் வாங்கி உயிர்த்தெழ செய்யும்
என் பார்வைக்கு மனித உருவில் நீ ஏசுவை போல புனிதமானவன்
உன்னை இழந்தால் அது இந்த யூகத்திற்கென கிடைத்த சாபம் நண்பா
அழுகைகள் ரணம் ஆகும் பூமியை அழிக்க என் கண்ணீரில் சுனாமி பொங்கும்
தமிழில் 247 எழுத்துக்கள் இருந்தும் உன் பிரிவை சொல்ல
வார்த்தை இல்லாமல் மௌனம் ஆகிறேன் நண்பா
கோடி யூகம் கிடைத்தாலும் உன்னுடன் வாழ்ந்த
மகிழ்சயான நிமிடங்கள் போதும் நண்பா