இயற்கையின் இசை கற்றுத்தந்த வாழ்க்கை

எங்கே இசை பேசுகிறதோ,
அங்கே வார்த்தைகள் தோற்றுவிடுகின்றன..

வேதனை,
துக்கம்,
இழப்பு,
அன்பு,
பண்பு,
கருணை என்று
நாம் வாழும் வாழ்க்கை பற்றி பேசுகிறது இசை...

உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டு ஒருமித்த கருத்துள்ளோர் ஒன்று கூடி வாழ வழிவகுக்கிறது இசை...

மற்றவர்களை நாம் புரிந்து கொள்ள, நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்ள வைக்கிறது இசை.

எங்கே இசை பேசுகிறதோ அங்கே வார்த்தைகள் தோற்றுவிடுகின்றன...

நீங்கள் இசையை விரும்புகிறீர்களோ, இல்லையோ? உண்மையை சொல்கிறது இசை.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகில் உள்ளவர்கள், நம்மை சுற்றி இருக்கும் பரமாத்மாவைப் பகிர்ந்து கொள்ள செய்கிறது இசை.

நான் என் இசை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
எனவே, நான் உணர்கிறேன் உண்மையை புரிந்து கொள்ள முடியுமென்று...
அதனால், என்னால் என் ஆன்மாவின் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்...
எனவே, நீங்கள் புரிந்து கொள்ள முடியுமென்று சொல்கிறேன் இந்த இசைவழியாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Oct-17, 1:11 am)
பார்வை : 1588

மேலே