பகுத்தறிவு இருந்தும் முழுமையடையாத மனிதர்கள்

உலகம் எண்ணற்ற உயிர்கள் சேர்ந்த உருவாக மனிதன் எண்ணிக் கொண்டான் அவனைப் போன்ற மனிதர்கள் மட்டுமே உலகமென்று...

பகுத்தறிவு இருந்தும் முழுமையடையாத மனிதர்கள்...
அங்கங்கு சண்டையிட்டு கொள்வார்கள் பயத்தில் உலாவரும் உடலுரிமை கொண்ட பேய்கள்...

இந்த பேய்களை ஓட்டுவது கடினம்..
ஏனெனில் பேய் குணங்களுக்குள் சிக்கி வாழ்வதே கௌரவமென்று கதறுகின்றன சிதையில் எரியும் பிணங்களாய்...

இரவில் ரோட்டில் ஒத்தையில் நீ போனால் பத்து பேர் கூடி வந்தே நீ யாரென்று விசாரிப்பர்...
ஒத்தைக்கு ஒத்தையாய் நின்று உன்னை விசாரிக்கும் ஆண்மகனேது?

மீசையை பாரு,
ஆயிரம் முறுக்கு கம்பிகளை நட்டு வைச்ச மாதிரி...
மனமோ கோழை...
என்னடா என்று ஒரு அதட்டலிட்டால் வீட்டிற்குள் ஓடிப் போய் கதவைப் பூட்டிக் கொள்ளும்...

மனிதன் என்னதான் உயிருள்ளவனாக இருந்தாலும்,
பகுத்தறிவுள்ளவனாக மிளிர்ந்தாலும்,
அவனுடைய பயத்தால் அவன் பாதுகாப்பை நாடுவது உயிரற்ற சுவர்களிடமும், உயிரற்ற கதவுகளிடமும் தான்...
ஆயுதம் ஏந்தித் திரிவது பயத்தின் அடுத்தபடி நிலை...

பயம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அளவைப் பொறுத்து மனிதர்களை வகைப்படுத்தலாம்...
அவர்களின் குணங்களை வரையறுக்கலாம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Oct-17, 8:49 am)
பார்வை : 2238

மேலே