கட்டாயப் பாடம்

நம்பிக் கெட்டதால்
நம்பிக்கை வரவில்லை
யார் மீதும்.....
தவறென்பதை
நியாயப்படுத்த விருப்பமில்லை
ஒருபோதும்....
எனக்கொரு
வாய்ப்பிருக்கையில்
அடுத்தவர் வாய்ப்பை
பறிப்பவனில்லை
எப்போதும்...
நீ என்னை நம்பித்தான்
ஆகவேண்டுமென்பது
கட்டாயமில்லை
இப்போதும்......
நம்பிக்கையெனும்
வரம்பெற ஆசையில்லை...
இன்னுமொரு பிரிவை
சந்திக்க அஞ்சவில்லை....
ஏனென்றால்
நீ என்னிடம் கற்றவள்.....
எனக்கு காலம் கற்றுத்தந்த
கட்டாயப் பாடம்...

எழுதியவர் : சு.கருப்பசாமி (21-Oct-17, 7:13 pm)
பார்வை : 88

மேலே