சும்மா ஒரு பாட்டு

எனக்கென யாருமில்ல,
சொல்லி அழ தோனவில்ல
இருந்தும் கண்கள் இங்கு கடலானதே
தத்தளிக்கும் ஓடம் போல மனம் மாறுதே !!!
கொட்டும் மழைசாரலிலே மேனியெங்கும் குளிருதடி
முந்தானை குடைக்குள்ளே நானும் வந்திறவா
பஞ்சு மடி மெத்தையில் கொஞ்சம் நானும் சாஞ்சிக்கவா
பட்டபாடு நானும் சொல்லி மனச தேத்திக்கவா !!!
காலமெல்லாம் கூட வாரேன்
கைபுடிச்சி கூட்டிப்போறேன்
சொர்க்கத்துல இடம் இருக்கு வாடி பெண்மயிலே
இந்த பூமியில வாழவேணம் போவோம் பூங்குயிலே !!!!