காதல் சம்மதம்
கதைகள் பேசிய விழிகள் இன்று
காதல் பேச அழைக்கிறது
யார் தொடங்குவது என்ற
கேள்வியுடன் மௌனம் ஆட்கொண்டது
நான் தொடங்க எத்தனிக்கும் வேளையில் வார்த்தைகள் வெளியேவர
முரண்டு பிடித்து தொண்டைக்குள் நிற்கிறது.
தயக்கத்தை தள்ளி வைத்து
காதல் மயக்கத்தில் வீழ்ந்திட
விழைந்தேன் அவளின்
காதல் பார்வையால் குழைந்தேன்
விரல்களோடு விரல்களை
கோர்த்ததும் காதல்
சம்மதம் தந்தாள்
தலைதனை என்
தோள்மீது சாய்ந்து.