ஊழல் BRIBE

மத்திய கொழும்பில் லோட்டஸ் (தாமரை) வீதியில் எட்டு மாடிகள் உள்ள வெள்ளை நிறக் கட்டிடத்தை தெரியதவர் இல்லை அந்த வீதியின் பெயர் இதுவரை மாறவில்லை ஒருவேளை புத்தருக்கு பிடித்தமான மலர் தாமரை என்பதால் இருக்கலாம். இக்கட்டிடம் 1965 ஆண்டு ,முதல் தபால் தந்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகமாக இருந்து. வருகிறது. அதற்கு முன்பு போஸ்ட் மாஸ்டர் ஜெனரலின் அலுவலகம் பிரித்தானியரால் அமைக்கப்பட்ட வரலாறு உள்ள கட்’டிடதத்தில் குவீன்ஸ் வீட்டுக்கு முன் இருந்தது. அது ஒரு காலத்தில் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஒபீஸ் என்று அழைக்கப்பட்டது
. எட்டு மாடிக் கட்டிடதுக்கு அருகே வானொலி அலைகள் ஒலிபரப்பு கோபுரமும் அதன் அருகே தந்திகள் அனுப்பும் (CTO) சீடியோ என்று அழைக்கபடும் பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் தலைமை டெலிகிராப் அலுவலகம் இருந்தது அங்கு வேலை செய்தவர்கள் போஸ்ட் மாஸ்டர்களும் தந்தி பட்டுவாடா செய்பவர்களுமே. ஒரு காலத்தில் மோர்ஸ் (Morse) கருவிகள் மூலமும் டெலிபிரின்டர் கருவிகள் மூலமும் செய்திகள் பரிமாறப் பட்’டது. இப்பொது அந்த நிலை முற்றாக மாறி மோர்ஸ் கருவிகள் மறைந்து விட்டது. மோர்ஸ் கருவி பாவிப்பதில் போஸ்ட் மாஸ்டர் சித்தி பெறவேண்டும். அதன=னால் அவர்களை போஸ்ட் மாஸ்டர் என்ற பெயருடன் . சமிக்ஞை செய்பவர்கள் ( Post Master & Signallers) என்ற பெயரும் சேர்ந்துகொண்டது
கிழமையில் இருபத்திமணி நேரமும் எழு நாட்களும் இயங்கும் அலுவலகம் சீடியோ (CTO). இந்த கட்டிடத்தை அறியாதவர் கொழும்பில் இல்லை. இதில் பல வருடம் பிரதான டெலிராப் மாஸ்டரராக (Chief Telegraph Master) வேலை செய்த சிவாச்சரம். முப்பது வருடங்கள் பல ஊர்களில் வேலை செய்த அனுபவம அவருக்கு உண்டு. . அவரது ஒரே மகன் சிவராசா அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் டாக்டராக வேலை.

மனைவியை இழந்த சிவாச்சரம் வேலையில் சிவா என்று அழைக்கப் பட்டார் . ப. அவருக்கு வெள்ளவத்தை நெல்சன் பிலேசில் மூன்று அறை வீடு. இருந்தது ஒரு அறையை வாடகைக்கு விட்டிருந்தார். அவரது தூரத்து சொந்தக்காரப் பையன் சுந்தரம் அவருக்கு துணை.. அவனே சமையல் வேலையும் செய்து வீட்டை கவனித்துக் கொள்வான் சிவா ஆறு வருடங்களுக்கு முன் மனைவியை இழந்து விட்டார். அவர் வீட்டில் டெலிபோன் கிடையாது பக்கத்து சமரசேகர வீட்’டில் உள்ள போனை மகனோடு தொடர்பு கொள்ள பாவிப்பார். சமரசேகர நல்ல மனிதர். அவரும்
சிவாவை போல் அரசசேவையில் இருந்து ஓய்வு பெற்றவர். இருவரும் சனிகிழமைகளில் சிவாவின் வீட்டில் இருந்து மகன் அனுப்பிய சிவாஸ் ரீகல் விஸ்கியை அருந்துவார்கள் அதனால் தன் வீட்டு போனை பாவிக்க சமரசேகர சிவாவுக்கு அனுமதி கொடுத்திருந்தார்
கோல் எடுத்த கட்டணத்தை போனுக்கு அருகில் உள்ள உண்டியலில் சிவா போட்டுச் செல்வது வழமை..
******
அன்று சனிகிழமை சிவாவும் சமரசெகராவும் விஸ்கியை சுவைத்தபடி பேசிகொண்டு இருந்தார்கள் அப்பொது தபால் தந்தி திணைக்களத்தில் வேலை செய்த சிவா போன் ஒன்றை வீட்டில் ஏன் வைதிருக்கவில்லை என்று சமரசெசரா அவரைக் கேட்டார்
“சேகரா. வெள்ளவத்தையில் போன் எடுப்பது கஷ்டம். ஒரு பெரிய வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறது. நான் போனுக்கு விண்ணப்பித்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு மேல் இன்னும் ஆறு பேர் வெயிட்’டிங் லிஸ்ட்டில் இருக்கினம். சிலர் இன்னும் உயிரோடு இருக்குறார்களோ தெரியாது. எனது முறை வர இன்னும் ஆறு மாதமோ ஒரு வருசமோ ஆகும்” என்றார் சிவா.

“சிவா, போன் சேவை பெற ஒப்புதல். பெறுவதை சிக்கலாக்;க’ வைதிருகிறார்கள் ஊழியர்கள்.. அப்போது தான் சம்பளத்தோடு அவர்கள் கிம்பளமும வாங்கலாம். எங்கு தேவை இருக்கிறதோ தட்டுப்பாடு இருக்கும் அப்போது லஞ்சம் புகுந்துவிடும் இது என் அனுபவம் என்றார் சமரசேகரா

“கிளார்க்ஸ் மாரின் செயல்முறை மிகவும் சிக்கலானதாக இருந்தாலும் அதை மீறி செயலாக்கும் வழி கிளார்க்குக்கு தெரியும். அவர்கள் விரும்பினால்
எந்த ஒரு விண்ணப்பதாரரையும் காகிதங்களின் குவியலிலிருந்து வெளியேற்ற முடியும் அமைச்சகமும் அரசியல் காரணங்களுக்காக நல்ல போன் நம்பர்களை ஒதுக்கீடு செய்து வைத்து இருக்கிறது. அவர்கள் மூலம். நீங்கள் சரியான அரசியல் இழுப்பு செய்தால், உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அது சரி உமக்கு தபால் தந்தி அமைச்சகத்’தில் யரையாவது தெரியுமா சேகரா”?
“ தெரியும்ஐவ .. எனது சித்தப்பா மகன் பண்டார அமைச்சகத்தில் உதவி செகரட்;டரியாக இருக்குறார்’. ஆனால்....”
“ஆனால் என்ன விஷயம் சொல்லும்”
“ அவர் சரியான ஊழல் பேர்வழி. காசு கொடுத்தால்: அவர் எதையும் செய்வார் சிவா “
*******
அன்று ஐந்தாவது மாடிக்கு சிவாவின் தனது வீட்டு போன் விண்ணப்பம் விசயமாக நான்காவது விஜயம் தன் டெலிபோன் விண்ணப்பத்தின் நிலையை அறிய ஆறு மாதத்துக்குள் மூன்று தடவை .போய் வந்திருக்கிறார் சிவா..
அவருக்கு கீழ வேலை செய்த போஸ்ட மாஸ்டர் சோமரத்தினாவின் மகன் கருனாரத்தினா ஒரு டெலிபோன் இணைப்புக்கு கொடுக்கும் பொறியிலாளர் அவரை சந்தித்து உதவி பெறும் நோக்கத்தோடு அவரின் அறைக்கு சிவா போனபோது கருனார்தினாவின் பியோன் குணதாச சொன்ன பதில் அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவருக்கு குணதாசவை நன்கு தெரியும் அரச சேவையில் பியோன் குணதாசவின் ஆதரவு இருந்தால் குவியலாக அனுமதிக்கு இருக்கும் பைல்களில் இருந்து தனக்குத் தேவை பட்ட பைலை தூக்கி மேலே முதலில் வைத்து அதிகாரியிடம் கையோப்பம் வாங்கும் கெட்டித்தனம் அவனுக்கு உண்டு. இந்த செயல் மூலம் அவனுக்கு ஒரு நாளைக்கு இரு நூறு ரூபாய் மட்டில் கிம்பளம் கிடைக்கும்
“சேர், கரு மாத்தையா ஒரு மீட்டிங்குக்கு போயிட்டார் அவர் வர குறைந்தது இரண்டு மணி நேரமாகும். ஏதும் அவசரமோ? என்று சிங்களத்தில் குணா கேட;டான்
சிவாவுக்கு சிங்களம் தெரியும், சிவா ஏமாற்றம் அடைந்ததார் . அவர் இதை அவர் எதிர்பார்கவில்லை



பல பொறியாளரின் நடத்தை அவரை மிகவும் கவலைப்பட வைத்தது.
அவர் பிரதான அலுவலகத்தில் நுழைந்த பொது சுவரில் இருந்த கடிகாரம்
10 மணி காட்டியது. பிரதான கிளார்க் சில்வா "லங்கா தீபா" பேப்பரை வாசித்துகொண்டு இருந்தார் .
சில கதிரைகள் காலியாக இருந்தன; ஒருவேளை ஊழியர்கள் கண்டீனுக்கு டீ குடிக்க போயிருக்கலாம். ஒரு லிகிதாரின் முபாதி பைல்கள் மறைத்து இருந்தது, இன்னொருவர் போனில் பேசிக் கொண்டு இருந்தார்
சில பொறியியலாளர்களின் அறைகள் காலியாக இருந்தன
, அதிர்ஷ்டவசமாக அவர்கள் பெயரையும் பட்டங்களையும் பதவியையும் குறிக்கும் பலகை எங்கும் போய் விடவில்லை. அவர்கள் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதை அது உறுதி செய்தது
கருனாரத்தினாவின் அறையில் போன் அடித்து.. பியோன் குணதாச பதறி அடித்துக் கொண்டு ஓடிப் போய் போனை எடுத்தான்

"இல்லை சார் ... ஆமாம் சார் ... இல்லை சார . மீட்டிங் முடிந்து அவர் எப்போ வருவர் என்று தெரியாது. வந்ததும் நீங்கள் போன் எடுத்தக் சொலுறேன் என்றன் மரியாதையோடு குணா
குணா. என்ன பேசுகிறான். யரோடு பேசுகிறான் என்று சிவாவுக்கு புரியவில்லை. அவன் பேசி விதத்தில் இருந்து அமைச்சு உயர் அதிகாரியாக இருக்கலாம் என சிவா யூகித்தார்
.
"............ ..". போனில் பேசிய குரல் இறுதியில் சிலவற்றைக் கொடுத்தது
அறிவுறுத்தல்கள். ஒரு காகிதத்தில் குணா அதை குறித்துக் கொண்டான்

வழக்கத்தில் பொறியியலாளர் மீட்டிங் முடிந்து நேரே லக்சலாவுக்குச் கியூ வில் நின்று வெளி நாட்டு பட்டர் வாங்கச் சென்றிப்பார் என்று சிவாவுக்குத் தெரியும்
“ஏன் சேர் மாத்தையாவைப் பார்க்க வேண்டுமா”? குணா சிவாவை கேட்டான்


"ம். எனது தொலைபேசி விண்ணப்பம் தொடர்பாக அவரைப் பார்க்க வந்தேன்
“நான் அவரது தந்தையுடன் CTO இல் வேலை செய்தனான். கருணாரத்தின மாத்தயாவை எனக்கு நல்லாய் தெரியும் “ சிவா பெருமையாக் சொன்னார்
"தொலைபேசி இணைப்பை எங்கே, நீங்கள் பெற விரும்புகிறீர்கள்?"
குணா கேட்டான்
"என் வீடு வெள்ளவத்தை நெல்சன் பிளாசில் இருக்குது. அங்கு தான் எனக்கு போன் தேவை. தனக்கு தொலைபேசி அவசியதை சிவா மேலும் வலியுறுத்தினார்.
"வெள்ளவத்தை என்றால் ...போனே எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான்
பெரிய வெயிட்டிங் லிஸ்ட் இருக்குது “
“ தெரியும் குணா . கிளார்க் சொன்னார் எனக்கு மேலே இன்னும் பத்து பேர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார்களாம் . எதாவது உன்னால் சேய்ய முடியுமா. என் மகன் அமெரிகாவில் டாக்டர்க வேலை செய்கிறார் . வரோடு நான் அடிக்கடி தொடர்பு கொள்ள போன் தேவைபடுகுது.

“ உங்கள் மகன் அமெரிக்கவிலா வேலை? அப்ப அவருக்கு பெரிய சம்பளம் கிடைக்குமே”
“எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது என்று நான். என் மகனிடம் கேட்பதில்லை.”

குணாவுக்கு சிவா கொழுத பணக்கார் என்று தெரியவந்தது. கறக்க வேண்டிய இடத்தில் கறக்க முடிவு எடுத்தான் குணா
“சிவா சார். நீங்கள் கரு மாத்தயாவுகுத தெரிந்த படியால் உங்களுக்கு போன் எடுத்து தரும் உதவியை செய்கிறேன். அவருக்கு மட்டும் சொல்ல வேண்டாம். கொஞ்சம் செலவாகும்.”
“ எவ்வளவு செலவாகும் குணா.”?
“அனுமதி பெற காசு கொடுக்கவேண்டும். கிளார்க் முதல் கொண்டு. தொலை பேசி தரும் இன்ஸ்பெக்டர். லைன்மான் நீங்கள் கேட்ட கலரில் புது தொலைபேசி தரும் எல்லோருக்கும் சேர்த்து சுமார் 4000 தேவை மினிஸ்டிரிக்கு ரிசேர்வ் செய்த நல்ல நம்பரில் ஓன்று எடுத்துத் தர இன்னும் 1000 தேவை. புது போன் சிவப்பு கலரில் தேவை எண்டரல் இன்னும் கொஞ்சம் 2000 தேவை .மொத்தம் 7000 தந்தால் காரியத்தை ஒரு கிழமைக்குள் முடித்துத் தாரன். என்ன சேர் சொல்லுறியல்”?.
”7000 ரூபாய் கூடிப் போச்சு.கொஞ்சம் குறைக்க முடியுமா குணா?
குணா சிறிது நேரம் யோசித்து விட்டு “ சரி சார் மாத்தயாவுக்கு நீங்கள் தெரிந்த படியால் 2௦௦ ரூபாய் குறைக்கிறேன் . மொத்தம் 68௦௦ ரூபாய் தந்தால் போதும்”
“ குணா முழுக் காசும் உடனே தர வேணுமா?

“இல்லை சார் முதலில் 4000, மிகுதி 28௦௦ போன் பிட் செய்து சர்வீஸ் தர இரு நாளைகளுக்கு முன் எனக்குத் தந்தால் போதும். இது பற்றி ஒருவரொடும் பேச வேண்டாம் என்று எனக்கு நீங்கள் சத்தியம் செய்ய வேண்டும் . முக்கியமாக கரு மாத்தையாவுக்கு தெரியக் கூடாது. பிறகு என் வேலைபோய்விடும்”, கண்டிபப்பாக குணா சொன்னான்.
“ நான் ஒருவருக்கும் சொல்லமாட்டேன் குணா. எனக்கு விரைவாக புது போன் கிடைத்தால் அதுவே பொதும். எப்ப காசு உம்மிடம் தர வேண்டும்”
“நாளைக்கு நாலு 1000 ரூபாய் நோட்;டுகலாய் 4000 ரூபாய் மாற்றி கொண்டு வந்து வை எம் சீ யேவில் மத்தியானம் ஒரு மணிக்கு என்னை சந்தித்துத் தரவும்” குணா. சொன்னான்;.
“ சரி நாளை பகல் ஒரு மணிக்கு காசோடுவாறன் . வை எம் சீ வில் உம்மை சந்திக்கிறன். உமது உதவிக்கு மிகவும் நன்றி குணா, கைகுலுக்கி நன்றி தெரிவித்துவிட்டு சிவா மனத் திருப்தியோடு வீடு திரும்பினார். ஹாலில் ஒரு மூலையில் எல்லோருக்கும் தனக்கு போன் இருக்கிறது என்று பார்வைக்கு தெரியும் இடத்தில வைக்க ஒரு சிறு வட்ட மேசையும் . குறிப்பு எடுக்க ஒரு நோட் புத்தகமும் பேனாவும் வைத்தார்.
அடுத்த நாள் வங்கிக்குப் போய் தேவயான பணத்தை மாற்றிக் கொண்டு நேரே வை எம் சீ யுக்குப் போய் குணாவை ஒரு மணிக்கு சந்தித்து 4000 ரூபாய்களை சிவா குணாவிடம் ஒரு என்வலப்பில் வைத்து கொடுத்தார். அவன் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு பணத்தை வாங்கி எண்ணி ஒரு சிறு பையுக்குள் வைத்தான்.
“சார் இன்னும் மூன்று நாட்களில் டெலிபோன் சேவை உங்கள் வீட்டுக்கு கிடைக்கும் . இந்த பணம் எனக்கு மட்டுமல்ல டெலிபோன் சேவை தரும் பலருக்கு பகிர்ந்து போகும்”: என்று உறுதியளித்தான் குணா
சிவா வீடு திரும்பிதும் தன் சாதனையை மகனுக்கு அறிவிக்க சமரசேகராவின் வீட்டில் இருந்து மகனுக்கு போன் கோல் எடித்து பேசினார,
” சமரசேகரா அங்கிள் வீட்டில் இருந்து பேசுகிறேன் மகன் என் வீட்டுக்கு இன்னும் மூன்று நாளுக்குள் போன் வந்திடும் . இதோ வீட்டு போன் நம்பர் எழுதிவை. என்று குணா கொடுத்த நம்பரை கொடுத்தார்
“அப்பா உங்களுக்கு விசரே.ஏன் இவளவு காசு கொடுத்து ஊழல் மூலம் போன் எடுத்தநீங்கள்” மகன் கேட்டன்
“ ஏன் மகன் அப்படி சொல்லுறாய்”?
“இனி உங்களுக்கு வீட்டுக்குப் போன் தேவை இல்லை. நீங்கள் அமெரிக்கா வர விசா எடுத்திட்டன். இனி போனை மறந்திடுங்கோ. போய் கொடுத்த காசை திரும்பிக் கேட்டு வாங்கப் பாருங்கோ.என்ன? சிவாவின் மகன் சொன்னான்
“அவனிடம் காசு கேட்டாள் திருப்பி அவன் தருவானோ தெரியாது. ஊழலில் கொடுத்த காசு. போனது போனதுதான் என்றார் கவலையோடு சிவா.

( உண்மையும் கற்பனையும் கலந்த கதை)
*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (24-Oct-17, 6:15 am)
பார்வை : 188

மேலே