கந்து வட்டி கருவறுக்க

எங்களோடு வெந்து திரட்டும்
கந்து வட்டி கொடுமை
என்று தீயிட்டு கொண்டாயோ???
ஏழையாய் இங்கே பிறந்தது
பாவம் என்று ..
தீயிட்டு கொண்டாயோ ???
எங்கு கேட்டும் நீதி இல்லையென
தீயிட்டு கொண்டாயோ ???
கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி
வைக்க தீயிட்டு கொண்டாயோ ???
என்ன பாவம் செய்தன
உன் பிள்ளைகள் அதற்கும்
முற்று புள்ளி வைத்த கோழையே
உன்னோடு தீர்ந்தால் போதுமே
வீணாய் போனதடா
அந்த பிஞ்சுகளின் கனவும்
கந்துவட்டிக்கு எதிராய்
உம்மை இழக்கவில்லை
விதைக்கிறோம் ...
கந்துவட்டி என்னும் அரக்கனை
கருவறுக்க அறிவுறுத்த ...???

எழுதியவர் : ருத்ரன் (24-Oct-17, 7:59 pm)
பார்வை : 253

மேலே