விண்மீன்களுக்காய்

எனதழகு பாரடா - அங்கே
எப்படி இருக்கிறது!
எண்ணிக்கை அதிகம் நீ இருப்பினும்
எனக்கு நிகராகுமோ!
எத்தனை தொலைவிருந்து பார்ப்பினும் - நீர்
என்னை மட்டுமே பிரதிபலிக்கும்
எனக்கு மட்டுமே ஒருநாள் விடுமுறை
உனக்கினி ஒன்றுமில்லை"
நீரிலே தெரியும் தன் பிம்பத்தைக்காட்டி தற்பெருமைகொண்டது வானிலவு.
தன்னிலை காட்டமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தது விண்மீன்.
தகுதியற்ற தற்பெருமை ஆடும் ஆட்டத்தை கண்டு ரசிக்க விரும்பாத இவ்வுலகினிறை.,
பாகுலத்தை வரவழைத்தது
பார்முழுதும் தீபமேற்றவும் சொன்னது;
ஏற்றிய தீபமெல்லாம் இரவினில் ஒளிர,
புத்துணர்ச்சியுடன் கண்ட
விண்மீன்களுக்கு புரிந்துவிட்டது,
இதுவே தன் பிம்பமென்று
பின்
தலைக்கனத்துடன் சுற்றிய வெண்ணிலவின் பிம்பத்தை சுட்டெரித்து,
இரவின் சூரியனாகிவிட்டது.
கார்த்திகைமாத நட்சத்திர தீபம்…..

எழுதியவர் : மகேந்திரன் (25-Oct-17, 5:49 pm)
பார்வை : 116

மேலே