காலநிலை

இருட்டு வானம்
அங்கும் ஓர் இசைக்கச்சேரி..
இடியும் மின்னலும்
கனப்பொழுது இடைவெளிவித்தியாசத்தில் பூமியை பிரவேசிக்கின்றன..
தனித் தனி வருகைக்கான
காரணம்
வீட்டில் ஏதும் பிரச்சினையா
என கேட்க தோன்றுகிறது..
மறுபக்கம் விட்டுக்கொடுப்பாக
இருக்கலாம் என யோசிக்க தோன்றுகின்றது...
துளி வடிவாலான காதல் நாயகன்கள்
பூமியை முத்தமிடும் வேளையில்
பின்னனி பாடகர்களாக தவளைகள்
ராகங்களை இசைக்கின்றனர்...

வயலின் நாற்றுக்கள் மெல்ல வெளியே
எட்டிப்பார்க்கையில்
உப்புக்குவியலுக்கடியில்
அதிகளவு தண்ணீர்
மழையோடு சேர்ந்த
உப்புக்களின் கண்ணீர்...
மீனவனின் உள்ளம்
கடலில் வள்ளத்தை போல்
தள்ளாடுகிறது..<
பள்ளி செல்லும்
பிள்ளையின் உள்ளமோ
விடியலும் இவ்வாரிருக்க
விடுமுறை பிரார்த்தனையில்...

என் கண்களோ மூட மறுக்கையில்
கற்பனைகளோ மலையின் உச்சத்தில்..
மலையடிவாரத்தில் குடையாய் காளான்
அதற்கடியில் இடைவிடாது அழுதுகொண்டிருந்த பெண் தவளை..
இரட்டைக்குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த காளான்
காரணத்தை கேட்க ...
கண்ணீரால் கவி வடித்தது
பெண்தவளை..
"காலநிலை மாற்றத்தால் வந்த
மனநிலை மாற்றத்தால் மற்றொரு மலரோடு சென்றுவிட்டான் என் நாயகன்..
மலையடிவாரத்தில் ஒதுங்கிவிட்டேன்
இம்மாது.."என்று முற்றுப்புள்ளி வைத்தது கண்ணீரால்..

எழுதியவர் : (27-Oct-17, 1:38 pm)
Tanglish : kaalanilai
பார்வை : 105

மேலே