அம்மு சின்னு கதைகள் -1

அம்மு சின்னு கதைகள்

அம்மா என்கிற அம்முவும் சின்னு என்கிற நான்கு அரை வயது சின்ன பையன் ஒருவனின் ஒரு நாள் உரையாடலின் சுவாரஸ்ய தொகுப்பு தான் இந்த கதை .

சின்னுவுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்.அம்மாவுக்கு சின்னுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அம்முவுக்கு தன பிறந்த நாளை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவளின் பிறந்த நாளை விட சின்னுவின் பிறந்த நாளைத் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் அன்று தானே அவள் அம்மாவாக பிறந்ததாள் அந்த இரு குட்டிக் கண்களை முதல் முதலில் பார்த்த நாள் அன்று தானே. அந்த கண்களின் மேலான அம்முவின் காதல் வருடம் கடந்தும் இன்னும் இன்னும் ஆழமாய் ஆகிக்கொண்டே .

அம்மு காலையில் எழுந்தாள் . அவள் எழுந்து காலை கடனை களைத்து விட்டு வருவதற்குள் சின்னு எழுந்து வந்திருந்தான்.

அம்மா : கதவைத் திறந்து வந்தாள் . (காலை கடனை முடித்து)
சின்னு: அம்மா
அம்மா : ஆஹா என் குட்டி வந்தாச்சா
சின்னு : ம்ம்ம்
அம்மா: இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் ல டா செல்ல குட்டி
சின்னு : நீ மட்டும் எழும்பிட்டா மா அதான் நானும் எழும்பிட்டேன்
அம்மா : அம்மா கு சமைக்கிற வேலை இருக்குல்ல டா அதுக்கு தான் எழும்பினேன்
சின்னு : எனக்கும் வேலை இருக்கு மா
அம்மா : உனக்கு என்னடா வேலை குட்டி எழுதணுமா
சின்னு : இல்லமா எனக்கு விளையாட்ற வேலை அதுக்கு தான் எழும்பினேன் மா, தெரியாதா ( சிரிச்சுகிட்டே விளையாட ஓடுறான் )
அம்மா : டேய்
சின்னு : நீ சமைக்கிற வேலை மா நான் விளையாட்ற வேலை குர் குர் கையில் குட்டி காரை ஓட்டியபடி
அம்மா : கையில் கரண்டியோடும் வாயில் சிரிப்போடும் ....

*************************************************
அம்மா : காபி குடிக்க வாடா செல்லம்
சின்னு : வேண்டாம் மா
அம்மா : ப்ளீஸ் டா குடி மா என் செல்லம் ல
சின்னு : உ ஹூம் மா
அம்மா : உனக்கு அப்பா மாதிரி பெரிய ஆர்ம்ஸ் கையில வரணுமா டா செல்ல குட்டி
சின்னு : ஆமா
அம்மா : அப்ப குடி டா
சின்னு : இப்ப வந்திடுமா மா ஆர்ம்ஸ் எனக்கு
அம்மா : அதெப்படி உடனே வரும்
சின்னு : இப்ப தான மா சொன்ன அவரும் னு, ஏமாத்தினியா மா
அம்மா : இல்லடா தங்கம் நீ டெய்லி பால் குடிக்க குடிக்க கொஞ்சம் கொஞ்சமா அப்பா மாதிரி வந்திரும் டா
சின்னு : பால் குடித்து ஏச்சு வாயை துடைத்துடைச்சுக்கிட்டே கையை பார்க்கிறான். ம் இப்ப கொஞ்ச வந்திருக்குமா சொல்லிக்கொண்டே ஓடுகிறான்
அம்மா : காலியான காபி கோப்பையோடும் முகம் நிறைந்த சிரிப்போடும் ....

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (29-Oct-17, 2:45 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 502

மேலே