அம்மு சின்னு கதைகள் -2

அம்மு சின்னு கதைகள்

அம்மா என்கிற அம்முவும் சின்னு என்கிற நான்கு அரை வயது சின்ன பையன் ஒருவனின் ஒரு நாள் உரையாடலின் சுவாரஸ்ய தொகுப்பு தான் இந்த கதை .

சின்னுவுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்.அம்மாவுக்கு சின்னுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அம்முவுக்கு தன பிறந்த நாளை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவளின் பிறந்த நாளை விட சின்னுவின் பிறந்த நாளைத் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் அன்று தானே அவள் அம்மாவாக பிறந்ததாள் அந்த இரு குட்டிக் கண்களை முதல் முதலில் பார்த்த நாள் அன்று தானே. அந்த கண்களின் மேலான அம்முவின் காதல் வருடம் கடந்தும் இன்னும் இன்னும் ஆழமாய் ஆகிக்கொண்டே .

அம்மு காலையில் எழுந்தாள் . அவள் எழுந்து காலை கடனை களைத்து விட்டு வருவதற்குள் சின்னு எழுந்து வந்திருந்தான்.

அம்மா : கதவைத் திறந்து வந்தாள் . (காலை கடனை முடித்து)
சின்னு: அம்மா
அம்மா : ஆஹா என் குட்டி வந்தாச்சா
சின்னு : ம்ம்ம்
அம்மா: இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் ல டா செல்ல குட்டி
சின்னு : நீ மட்டும் எழும்பிட்டா மா அதான் நானும் எழும்பிட்டேன்
அம்மா : அம்மா கு சமைக்கிற வேலை இருக்குல்ல டா அதுக்கு தான் எழும்பினேன்
சின்னு : எனக்கும் வேலை இருக்கு மா
அம்மா : உனக்கு என்னடா வேலை குட்டி எழுதணுமா
சின்னு : இல்லமா எனக்கு விளையாட்ற வேலை அதுக்கு தான் எழும்பினேன் மா, தெரியாதா ( சிரிச்சுகிட்டே விளையாட ஓடுறான் )
அம்மா : டேய்
சின்னு : நீ சமைக்கிற வேலை மா நான் விளையாட்ற வேலை குர் குர் கையில் குட்டி காரை ஓட்டியபடி
அம்மா : கையில் கரண்டியோடும் வாயில் சிரிப்போடும் ....

*************************************************
அம்மா : காபி குடிக்க வாடா செல்லம்
சின்னு : வேண்டாம் மா
அம்மா : ப்ளீஸ் டா குடி மா என் செல்லம் ல
சின்னு : உ ஹூம் மா
அம்மா : உனக்கு அப்பா மாதிரி பெரிய ஆர்ம்ஸ் கையில வரணுமா டா செல்ல குட்டி
சின்னு : ஆமா
அம்மா : அப்ப குடி டா
சின்னு : இப்ப வந்திடுமா மா ஆர்ம்ஸ் எனக்கு
அம்மா : அதெப்படி உடனே வரும்
சின்னு : இப்ப தான மா சொன்ன அவரும் னு, ஏமாத்தினியா மா
அம்மா : இல்லடா தங்கம் நீ டெய்லி பால் குடிக்க குடிக்க கொஞ்சம் கொஞ்சமா அப்பா மாதிரி வந்திரும் டா
சின்னு : பால் குடித்து ஏச்சு வாயை துடைத்துடைச்சுக்கிட்டே கையை பார்க்கிறான். ம் இப்ப கொஞ்ச வந்திருக்குமா சொல்லிக்கொண்டே ஓடுகிறான்
அம்மா : காலியான காபி கோப்பையோடும் முகம் நிறைந்த சிரிப்போடும் ..

********************************************************************************
மணி காலை 7.45 மணி
அம்மா : நேரமாச்சு மக்களே பிரஷ் பண்ண ஓடு
சின்னு : அம்மா கொஞ்சம் தூக்கம் வருது மா
அம்மா: டாய் விளையாடிகிட்டு தான டா இருந்த இவ்ளோ நேரமும்.
சின்னு : ஆமா மா
அம்மா : அப்புறம் எப்படி டா இப்ப தூக்கம் வருது ங்கிற , கள்ளா
சின்னு : இல்லமா விளையாடி டையார்ட ஆகிட்டேன் ல அதான் தூக்கம் வந்துடுமா , படுத்து கண்ணை மூடி பாசாங்கு செய்ய தொடங்கினான் கண்ணன்
அம்மா : நேரமாச்சு டா சின்னு
சின்னு : சத்தமே இல்லை பாசாங்கு அப்படியே அமைதியாய்
அம்மா வாடா
சின்னு : அமைதி (கண்ணை திறந்து ஓட்டை கண் போட்டு பார்த்தபடி )
அம்மா : (கோபம் வர சத்தம் உயர்த்தி) டாய் வர போறியா இல்லையா
சின்னு : தம்பிய மட்டும் குளிக்க தூக்கிட்டு போவ என்னய மட்டும் தூக்க மாட்டாங்க
அம்மா : இவ்வளவு தானா ட செல்ல குட்டி . இரு ஓடி வரேன் (அடூப்பை அமர்த்தி விட்டு)
சின்னு : அரைக்கண் விட்டபடி அம்மாவுக்காக
அம்மா : ஓ செல்ல பேபி நல்லா தூங்கிறான் போல இருக்கே எடுப்போம் பேபி யை
சின்னு : உதடு மெல்ல விரிகிறது. முகமெல்லாம் மத்தாப்பு . முழிச்சுட்டேன் மா , தூக்கு
அம்மா : வந்துருங்க டா செல்ல குட்டி
சின்னு : முகமெல்லாம் சிரிப்பும் குஷியாக அம்மா தோளில் அமர்ந்தபடி பாத்ரூம்க்குள் நுழைகிறான்
அம்மா : சின்னு ஈஈ காட்டு
சின்னு : ஈ ஈ ஈ ஈ ஈ ஈ
அம்மா : சிரிச்சது போதும் பல்லை காட்டு
சின்னு : ஓகே மா
அம்மா : ஓல்ட் மெக்டொனால்ட் ஹாட் எ போரம் இய இய ய்யா ஓ (ரைம்ஸ் பாடியபடி பல்லைத் துலக்க)
சின்னு : இய இய ய்யா ஓ

*************************************************************************
மணி காலை 8:00

அம்மா : டாய் சின்னு
சின்னு : என்னம்மா
அம்மா: சின்னு இங்க வாடா
சின்னு : என்னமா
அம்மா : வாடா அம்மாக்கு ஒரு பொருள் காணல டா நீ தானே எதுனாலும் சூப்பர் ஆ தேடி தருவ அதான் ஒருக்கா வா டா
சின்னு : ஒ ஹெல்ப் ஆ . ஓகே ஓகே ஒரு நிமிஷம்
அம்மா : ஓடியா சீக்ரம்
சின்னு : என்ன மா குக்கர் விசிலா (கப் போர்டை திறந்தபடி )
அம்மா : இல்ல டா இன்னைக்கு அதில்ல அம்மா கேரட் தோல் சீவனும் அதுக்குள்ள தோல் செதுக்குகிற பீலேரை தான் காணோம் டா
சின்னு : ஓஹோ
அம்மா : ஐயோ அது வேணுமே டா
சின்னு : கொஞ்சம் தேடி பார்த்து கிடைக்கவில்லை , பேசாம நீ ஒட்டக சிவிங்கியாய் மாறு மா
அம்மா : ஏன் டா
சின்னு : அப்ப தான் உன் கழுத்து அப்டியே உயரமாகி உன்னால எல்லா இடத்துலயும் தேடி ஈஸியா கண்டு பிடிச்சிடலாம் மா
அம்மா : ஓஹோ ஐடியா நல்ல தான் இருக்கு டா,அம்மாவால அப்டி மாற முடியாதே டா.
சின்னு : அப்ப இன்னைக்கு கேரட் வேண்டாம் நாளைக்கு வைக்கலாம் நீ வேற ஏதாவது வை ஓகே யா. பிரிட்ஜ் திறந்து கொண்டே என்ன வேணும் சொல்லு ,
அம்மா : என்ன மா பண்றே
சின்னு : இந்த பீட்ரூட் வேணுமா
அம்மா : அதுக்கும் தோல் சீவனும் தெரியாதா டா
சின்னு : ஓஹோ அப்ப இந்தா பீன்ஸ் ஓகே யா
அம்மா : டேய்
சின்னு : ஒன்னும் இல்லமா நாளைக்கு கேரட் பண்ணலாம் ஓட தொடங்குகிறான் .


**********************************************************************************************************************


சாயந்திரம் 6 மணி

அம்மா : சின்னு ஓடி வா டா
சின்னு : என்ன மா
அம்மா : வா டா மேல கழுவவோம்
சின்னு : வெளியில் நின்றபடி இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுவோம் மா , நான் வர மாட்டேன்
அம்மா : அம்மா சொன்னேன் ல டா நாம கல்யாண வீட்டுக்கு போறோம் னு , மறந்துட்டியா
சின்னு : ஓஹோ 7 ஓ கிளாக் போலாம் மா
அம்மா : அப்ப அங்க எல்லாம் முடிஞ்சிடும்
சின்னு : முடியாதும்மா உனக்கு தெரியாது மா
அம்மா : நீ வரியா நான் கிளம்பு போறேன் அப்பா வரப்ப கிளம்பி இருக்கணும் . நான் போறேன் . நீ வீட்ல இரு .
சின்னு : தம்பி வர்றானா
அம்மா : தம்பி ரெடி டா நீ தான் இப்படி அழுக்கா இருக்கே , நான் போறேன் பா .
சின்னு : அம்மா நானும் வாரென் (உள்ளே ஓடி வருகிறான்)
மேல கழுவி எல்லாருக்கும் மேட்சாக சிவப்பு டிரஸ் போட்டு அழகு பார்த்தாள் அம்மா. அவளும் குளித்து ஆசையாக சிகப்பு சுடிதார் போட்டு தயாரானாள்.
அம்மா : (சின்னுவின் அப்பாவுக்கும் ஆசையாக அதே நிறத்தில் சட்டை எடுத்து வைத்துக் கொண்டே) அப்பாவுக்கு டிரஸ் ரெடி என்று சொன்னாள் .
காலிங் பெல் சத்தம் ட்ரீங் ட்ரெங்
சின்னு : ஆ அப்பா .. அப்பா வந்தாச்சு ஹேய்
அப்பா : கிளம்பியாச்சா போலாமா
அம்மா : உங்களுக்கு சட்டை எடுத்து வச்சிருக்கேன்
அப்பா : (முகத்தை கழுவிக்கொண்டு ) எனக்கு இது போதும்
அம்மா : இல்ல அது
அப்பா :போதும் னு சொன்னேன்
அம்மா : சின்னு பாரு டா அப்பா நான் எடுத்து வாய்த்த சட்டை போடலை . ம்ம்
சின்னு :( அம்மா முகத்தில் கொஞ்சம் சோகத்தை பார்த்த சின்னு கொஞ்சமும் யோசிக்காமல் ) ஒன்னு இல்லமா . எனக்கு 33 வயசு ஆனதும் நான் இந்த சட்டையை போடுறேன் ஓகே யா நீ சங்கடப்படாத மா .
அம்மா : இதயம் நெகிழ தன மழலையை மார்போடு அனைத்து கொண்டிருந்தாள்.
அப்பா : போலாமா என்ற அப்பாவின் சத்தத்தில் நிமிர்ந்த அவளிடம் அவன் கிசு கிசுத்தான் . அந்த சட்டையை இன்னொரு நாள் போடுறேன் என்று. ( எதோ உறுத்த )

சின்னு : அப்பா என்று அவன் தோள்களை கட்டிக்கொண்டான் . அவன் இதயத்தையும் ஒட்டிக் கொண்டான்
அம்மா : இதயம் முழுக்க மழலையின் அன்பு நிறைத்தபடி காதலோடு சின்னுவை பார்த்தபடி நடக்க தொடங்கினாள்

**********************************************************************************************

இரவு 8.30 மணி :

அம்மா : இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கீங்க
அப்பா : அப்புறம் என்ன சொல்ல உன்கிட்ட
அம்மா : இப்ப என்ன சொல்ல வரீங்க , என் மேலயா தப்பு
அப்பா : சொன்னா மட்டும் உனக்கு புரியவா போகிறது (சத்தம் உயர்ந்தது இருபக்கமும்)
சின்னு : அம்மா கிவ் ரெஸ்பெக்ட் , அப்பா கிவ் ரெஸ்பெக்ட் ( ஹாலில் விளையாடி கொண்டிருந்தவன் இப்படி சொன்னபடி அறையினுள் நுழைந்தான் ) இப்போது இருவரும் கப்சிப்
அம்மா : என்ன டா சின்னு விளையாடலியா
சின்னு : விளையாடிகிட்டு இருந்தப்ப உங்க சத்தம் கேட்டுச்சு மா
அம்மா : அப்பாவும் நானும் சும்மா பேசிக்கிட்ருந்தோம் டா (சமாளித்தாள் ). அடுத்து என்ன சொல்ல யோசித்தால் .
சின்னு : இல்லையே எனக்கு சத்தம் கேட்டுச்சு ....
அப்பா : சின்னு இங்க வா
சின்னு :என்ன பா
அப்பா : செல்ல குட்டி ,அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்தார். மழலை வஞ்சனை இல்லாத சிரிப்போடு அதை திருப்பி தந்தது .
சின்னு: அம்மா என்றபடி அவள் கன்னங்களையும் ஈரமாகக்கியது .

அந்த மழலையின் முத்தத்தின் ஈரத்தில் அவர்கள் இருவரின் கோபங்கள் குளிர்ந்திருந்தது அப்போது .

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (29-Oct-17, 4:27 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 287

சிறந்த கவிதைகள்

மேலே