ஒரு கைம்பெண்ணின் kalyanam
"பெண்ணாகப் பிறப்பதே பாவம்" என்ற கூற்று மறைந்து "பெண் பிள்ளை பெற்றோரே பேறுபெற்றோர்" என்ற நிலை சமுகத்தில் நிலவி வரும் இந்நேரத்தில் அப்பெண்ணின் ஒவ்வொரு பருவ நிலைகளும் நிச்சயம் சமூகத்தால் ஏற்று கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
அப்படி ஒரு பெண் குழந்தை குமாரி ஆகும்போது சடங்கு செய்து வாழ்த்தும் இந்த சமூகம் அந்த குமாரி திருமதி ஆகும்போது கொண்டாடும் இந்த சமூகம் அவள் மகப்பேறு காலத்தில் வளையல் பூட்டி வாழ்த்து சொல்லும் சமூகம் அவள் அன்னை ஆனதும் அனந்த கூத்தாடும் இந்த சமூகம் கணவனை இழந்து கதறும் போது மட்டும் எண்ணு அந்த குலவதுவை கொள்ளியில் தள்ளுகிறது!!
மாற்றம் மனதில் இருந்து தான் துவங்குகிறதெனில் ஏன் மாறக்கூடாது.இன்று குழந்தைப்பேறு ஒரு பெரும் புதிராக மாறிவிட்ட நிலையில் ஒரு குழந்தையை தத்தெடுப்பது எப்படி நடைமுறை ஆகிவிட்டதோ அதேபோல் ஒரு மனைவியை இழந்த ஆணோ அல்லது திருமண வயதில் இருக்கும் ஆணோ ஒரு கைம்பெண்ணை குழந்தையோடு தத்தெடுத்து கொள்வதும் ஒரு விதமான சேவையே.