சுவாசத்தின் நேசம்
பூப்போல மழைத்துாரல் ,
பூசிய வண்ணத்துடன் வானம் ,
புன்னகை என் இதலோடு இசையும் ,
பறவையும் குரலற்று வியப்பில் ,
பரவசமும் பாதையற்று கிறக்கத்தில் ,
பார்வை முற்றிலும் இயற்கையுடன் காதலில்,
பறக்கிறேன் இறக்கையின்றி மேகத்திற்கே,
பொழிந்திடும் கவி மழையினைக் காண,
பாதம் பதியும் இடமெ௩்கும் பனி,
பனியில் வைர மலர்கள் ,
பயணத்தில் திளைத்தப்படி உறைந்து
பாதியிலே திகைத்து நிற்கிறேன் நான் !