முதல் பார்வையில் காதல்

யாருமில்லா சாலையில் மெல்ல நடந்தேன்.சிறிது தூரம் நடந்து இருப்பேன் என் கண்களுக்கு ஹேன்ட் பேக் ஓன்று தென்பட்டது அருகில் சென்று மெல்ல குனிந்து சற்று அச்சத்துடன் என் கை வைத்து எடுத்தேன்.அக்கணம் என் உடம்பில் எதோ ஒரு மாற்றம்.பையை கையில் எடுத்து சுற்றி பார்த்தேன் யாருமில்லை.கொஞ்சம் யோசித்து பையை மெல்ல திறந்தேன் கலர் பொட்டு பாக்கெட்டும் சில்லரை காசும் இருந்தன வேறு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன் ஒரு விசிட்டிங் கார்டு இருந்தது அதில் உள்ள நம்பர்க்கு போன் செய்தேன்.

சற்று நேரத்தில் எதிர் முனையில் இருந்து ஹலோ என்ற குரல் கேட்டது.என் காதில் அவ்வளவு இனிமையான குரலை கேட்டதும் மெய் மறந்து நின்றேன். மீண்டும் அங்கிருந்து ஹலோ ஹலோ என்று சொல்ல கொஞ்சம் சுதாரித்து நானும் ஹலோ என்றேன்.யாரு சொல்லுங்க என்று அவள் கேட்க எனக்கு வார்த்தை வராமல் ஏதோ உளர அவள் புரியல திரும்ப சொல்லுங்க என்றால் கொஞ்சம் நிதானத்துடன் ஹேன்ட் பேக் ஒன்னு ரோட்ல கிடந்துச்சு என்றேன்.அதற்கு அவள் என்னோட பேக்தான் சாரி சார் நான்தான் மிஸ்பண்ணிட்டேன் என்றால் .நாளைக்கு பிரியா இருந்த காபி ஷாப்க்கு 10 மணிக்கு வரிங்களா என்றால் நானும் ஓகே வந்துடுறேன் என்று சொன்னேன் அவள் ஓகே தேங்க்ஸ் சார்னு சொல்லிட்டு போன வைத்து விட்டாள். பின்பு தான் புரிந்தது அவள் ஹேன்ட் பேக்கை முதல் முறை தொட்ட போது என் உடலில் ஏற்பட்ட மாற்றமும் முதல் தடவையில் அவள் குரலை கேட்டு மெய் மறந்து போனதுக்கும் அர்த்தம் புரிந்தது.என்னை அறியாமல் அவள் மீது காதல் கொண்டு விட்டேனென்று. மறுநாள் 10 மணிக்கு காபி ஷாப்புக்கு போய் போன் செய்தேன் சார் நான் இங்கதான் 5 வது டேபிள் இருக்கேன் நீல புடவை கட்டிருக்கேன் என்றால் 5 வது டேபிளை பார்த்தேன் என்ன ஒரு அழகு .மெல்ல நடந்து அருகில் சென்று ஹலோ சொல்ல சார் உக்காருங்க என்றால் நான் புண் முறுவலோடு உட்கார்தேன்.காபி ஆர்டர் பண்ணிட்டு பேச தொடங்கினாள் என் மனதில் எப்படியாவது காதலை சொல்லிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.அந்த நேரத்தில் அவள் போனுக்கு கால் வந்தது ஒரு நிமிஷம் சார் என்று சொல்லி போனில் பேசினாள் அப்பொழுது அவள் முகத்தில் பயமும் பதற்றமும் தெரிந்தது.என்ன என்று நான் கேட்பதற்குள் என் குழந்தைக்கு கீழ விழுந்து அடிப்பட்டு விட்டதாக சொல்லி காபி கூட குடிக்காமல் சாரி சொல்லிட்டு அவசரமாக கிளம்பிவிட்டாள்.என் மனம் கலங்கினேன் முதல் பார்வையில் காதல் என்பது கடினம் என்று உணர்ந்தேன்.

எழுதியவர் : ஜெ ஜெயசூர் (1-Nov-17, 12:01 pm)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
பார்வை : 485

மேலே