தமிழன் இதயம் துடித்தது

காதலர் இதயம் துடிக்கும்
காதல் காதல் என்றே
கவிஞர் இதயம் துடிக்கும்
கவிதை கவிதை என்றே

மாணவர் இதயம் துடிக்கும்
படிப்பு படிப்பு என்றே
தலைவர் இதயம் துடிக்கும்
சேவை சேவை என்றே

வீரன் இதயம் துடிக்கும்
வெற்றி வெற்றி என்றே
தொண்டன் இதயம் துடிக்கும்
தலைவன் தலைவன் என்றே

உழவன் இதயம் துடிக்கும்
வாடும் பயிரைக் கண்டே
தமிழன் இதயம் துடித்தது
மறுக்கும் உரிமை கண்டே

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 3:44 pm)
பார்வை : 944

மேலே