தோழிக்கு கவிதை

ஓ! பிரிய சினேகிதியே..
என் இதயத்தின் ஏடுகளை
நான் அறியாமலேயே
படித்தவளே ...

தாய் மடிக்குப் பிறகு
உன் எழுத்துக்களில் தான்
என் மனம் குழந்தையாய்
உறங்குகிறது..

இந்த அன்பு...
இந்த பிரியம்..
என்னிடம் வார்த்தைகள் இல்லை

பிரிய சினேகிதியே
பிரியா சினேகிதியே..
பிறந்து வருவோமா
இன்னுமொருமுறை..

நீயின்றி போய்விட்ட காலங்கள்
எனக்கு திரும்ப வேண்டும்
உன்னோடு கழிக்க..

எழுதியவர் : (1-Nov-17, 4:06 pm)
Tanglish : thozhiku kavithai
பார்வை : 12871

மேலே