ராஜாங்க இரவு

மழையில் மின்சாரம் போனது...
எண்ணெய் விளக்குகள்
ரம்மியமாய் எரிகின்றன...
வீடெங்கும் அற்புதமாய்
மெல்லிய வெளிச்சம்...
இந்த இரவு என்ன
அந்த சேர சோழ
பாண்டிய அரசுகளின்
ராஜாங்க இரவுகள் கூட
இப்படித்தான் இருந்திருக்கும்...
இந்த இனிய இரவில்
என் கண்களும் கால்களும்
என் முப்பாட்டன்களை
நினைவுபடுத்துகின்றன...
எரியாத மின் விளக்குகளுக்கும்
எரியும் எண்ணெய் விளக்குகளுக்கும்
மனது நன்றி சொல்கிறது...
😀👍🙋🏻‍♂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-Nov-17, 11:16 pm)
பார்வை : 248

மேலே