இந்த அன்புக்குப் பெயரில்லை
ரயில் நிலைய
வழியனுப்புகளில்...
ஒரு மணிநேரத்துக்கும்
மேலான காத்திருப்பில்...
விடாமல் பேசியபின்பும்
ரயில் புறப்பட்டுச் சென்று
மறையும் சில நொடிகளைச்
சிறிதும் தவற விடாமல்...
முகம் பார்த்து கையசைத்துப்
பிரியும் மனங்களில்...
அதீத அன்புக்கும் மேல்
ஏதோ ஒன்று இருக்கிறது...
அதற்கு இன்னும்
பெயரிடப்படவில்லை...
-- ஆர். சுந்தரராஜன்.
👍🙋🏻♂🙏