கடல்-மேகக் காதல்

மேகத்தின் மீது காதல்..

காதலியின் நினைவிலே
தினம்
அலைவீசிக் கொண்டிருக்கிறது
கடல்நீர்.

சுற்றிவீசும்
தென்றலையெல்லாம்
சூராவளியாக்கி..
முற்றியகாமத்திற்கு
முழுமருந்திட,
கனவோடு வாழ்ந்தவள்
கரம்நாடிச்சென்றது கடல்நீர்.

ஆகாயத்தில் இணைந்து - அவன்
அரவணைப்பிலே தவழ்ந்து
ஆடிப்பாடித் திரிந்தது
ஆகாயமேகம்..

கருசுமந்தது மேகம்..

கைவிட்டுச்சென்றது கடல்நீர்..

கடல்நீர்சென்ற சோகத்திலே
கால்போன போக்கிலே
கரைதாண்டி சென்ற (கரு)மேகம்
மின்னல் வெளிச்சத்தில் பெற்றெடுத்தது,
அழகிய மழைத்துளிகளை...

பின்
பெற்றெடுத்த மழைத்துளியை
தொலைத்துவிட்டு,
தொலைந்தும்போய்விட்டது அம்மேகம்..

தரையில்
அனாதையாய் திரியும் மழைத்துளி
ஆணென்றால்
நதியிணைந்து கடல் கலப்பதும்;
பெண்னென்றல்
ஆவியாகி மேகமாவதும்தான்
இவர்களின் சுழற்சிவாழ்க்கை.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (2-Nov-17, 11:11 am)
பார்வை : 101

மேலே