வறுமையின் அடிமை நானோ

சிக்கித் தவிக்கும் மனதில்
சிந்தனை பல கோடி
உற்றவர் யாரும் இல்லை
உறவுகள் என்றும் இல்லை

எத்தனை இன்னல்களை நான் இளமையில் கண்டு வந்தேன்
மணவாழ்க்கை ஒன்றை மகிழ்வாய் நான் ஏற்றுக் கொண்டேன்

கட்டியவர் என்னை கைவிட்டே
சென்றும் விட்டார்
ஏழ்மைதான் எதற்கும் காரணம்
இதைதான் அவரும் சொன்னார்

கணவரை கண்டதெல்லாம்
கனவிலே மட்டும் அம்மா
காசையே கட்டிக்கொண்டு
கணவிலும் தூங்குகின்றார்

ஏழையாய் பிறந்தது என் தவறா?
என்னை ஈன்றெடுத்தவள் தவறா?
எதுவுமே புரியவில்லை
ஏழை என் மனதை எவருமே
அறியவில்லை

எழிமைதான் என்தன் வாழ்வோ
இன்னல்கள் எந்தன் உறவோ?
வெறுமையில் வாடும் நெஞ்சம்
வறுமைக்கு என்றும் அடிமைதானோ .....

எழுதியவர் : (2-Nov-17, 1:17 pm)
பார்வை : 81

மேலே