மழை
மேகத் தீண்டலின்
உயிர்த்துளி - மழை
இயற்கையின்
முதல் ஆதாரம் -மழை
இறையின்
முக்கிய முதற்கொடை -மழை
கடும்வெப்பத்தின்
அருமருந்து -மழை
பூமியில் சிந்தி
பசுமை பிறக்கட்டும்
பூக்களில் சிந்தி
ரசனைகள் பெருகட்டும்
அவள் மேனி நனைத்து
சிலிர்க்க செய்யட்டும்
மனம் ருசித்திட
தேநீர் பருகட்டும்