வெளியே மழை

வெளியே மழைவெள்ளமாய் வீதிகளில் தண்ணீர்
உள்ளுக்குள் வேண்டும் வேகாத புழுக்கம்
அரண்மனை வாயில்
அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்
அள்ள அள்ள குறையாத நவரத்தினங்கள்
உள்ளுக்குள் அழுக்கு கந்தையோடு நான்
வெளிச்சமாய் வானத்தில் வெண்ணிலா
ஒளிப்புள்ளிகளாய் நட்சத்திரங்கள்
உள்ளுக்குள் குமையும் இருட்டு வனாந்திரம்
தாய் தந்தை பிள்ளைகள் என
உறவுக்கூட்டம் வெளியே
உள்ளுக்குள் ஒருவருமே இல்லாத துறவியாய் மனம்
எத்தனை முரண்பாடுகள்
எத்தனை எத்தனை எதிர்பக்கங்கள்
நான் யாரென்று தெரிவதற்குள்
என் மயக்கம் தெளிவதற்குள்
என் வாழ்வின் கடைசி பக்கத்தை
புரட்டுகிறான் -அவன்
வெளிவேஷங்களை உண்மையென்று
வெற்று கோஷங்களோடு நான்
வெளிவருவதற்குள் அடுத்த பிறவி
தெளியுமா இந்த மயக்கம்
தெளிவை தேடி நான்
உள்ளுக்குள் போகிறேன்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (2-Nov-17, 4:52 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
Tanglish : veliye mazhai
பார்வை : 313

மேலே