என் வலி

என் வலி மன வலி
தந்தது உன் மௌனமடி
சிறுதுளி சிரிப்பொலி
சிந்தினால் சிறப்படி

உன் விழி வழி
சொல்லும் மொழியினை
புரிவது தலை வலி
சரிவது மனமடி

சம்மதம் சொல்லடி
நீ சாய்ந்தால் தாய்மடி
தோள்கொடு நிதமடி
தரிசனம் உன் திருவடி

எழுதியவர் : ருத்ரன் (3-Nov-17, 6:01 pm)
Tanglish : en vali
பார்வை : 113

மேலே