எப்படி அறிய ஒரு பயணம்

தமிழ் அகராதிகளை புரட்டி பார்க்கிறேன் உன்னிடடம்
என் காதலை பிழை இல்லாமல் எப்படி சொல்ல என அறிய
திருக்குறளில் அன்பை தேடி கொண்டிருக்கிறேன்
நிஜமான அன்பை உனக்கு எப்படி தருவதென்று அறிய
கம்பனை தேடி கொண்டிருக்கிறேன் உனக்கான
கவிதை வர்ணிப்பது எப்படி என்று அறிய
புராணங்களை புரட்டி பார்க்கிறேன் ஆதாம் ஏவாளை போல
நீயும் நானும் சேர்ந்து வாழ என்ன வழி என்பதை அறிய
மொகஞ்சதாரோ ஹராப்பாவை தேடி செல்கிறேன் நமக்கான
வாழ்க்கையை எப்படி ஆரம்பிப்பது என்று அறிந்து வர
சிரஞ்சிவியை தேடி செல்கிறேன் நான் அழிந்தாலும்
நீ சிரஞ்சிவியாய் உலகில் வாழ்வது எப்படி என்று அறிய
தேடியதெல்லாம் கிடைக்காதென்று தெரிந்தும் முயற்சிக்கிறேன் உன்னிடம் தேடிய என் காதலை போலவே !!!!!

எழுதியவர் : ராஜேஷ் (4-Nov-17, 8:03 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 139

மேலே