உன் காதல் போதுமே எந்நாளுமே

உன் தேடல் நானாக
என் தேடல் நீயாக
நாம் தேடும் ஒன்றாக
நம் காதல் வாழுமே
எனக்கு என்றும் அது போதுமே

நீளும் கவிதை பொருளும் நீ
நீண்ட தூரம் பயணம் நீ
காணுகின்ற எதிலும் நீ
கண்களறியா காற்றும் நீ
கனவில் காணும் காதல் நீ
காதல் தந்த முத்தம் நீ
என்னுள் என்றும் மொத்தம் நீ
தேடி தீண்ட வா ஆசை தூண்டவா
பேராசை கொண்ட காதல் நெஞ்சம்
பெண்மை என்று சொல்லவா ...

நான் துவண்டு போகும் நேரம்
உன் தோள்சாய தோணும்
என்னை தேற்ற உன் கண்கள் பேசும்
ஒற்றை வார்த்தை போதும்
நீ என் அருகில்
நான் உன் மடியில்
தலைசாயும் நொடியில்
தாரம் உருவில் தாய்மடி தருவாய்
சேயென மாற்றி தாலாட்டு புரிவாய்
மீண்டும் பிறந்தால் வாய்ப்பு இருந்தால்
அங்கும் நீயே வர வேண்டுமே
துணையாய் நிற்கும் வரம் வேண்டுமே

எழுதியவர் : ருத்ரன் (4-Nov-17, 10:40 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 620

மேலே