உனக்கொரு கவலை வேண்டாம்

என்னவளாய் இருந்தவளே
உனக்கொரு கவலை வேண்டாம்
உன் நினைவு என் இதய கடிகாரத்தில்
சற்றுத் தளர்ந்தே தான் ஓடுகிறது
உன்னை மறக்க தொடங்கி விட்டேன்

நாம் எடுத்த புகைப்படங்கள்
யாவும் புகையாகி விட்டன
உன் பெயரை யாரும் உச்சரிப்பின்
நான் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை
உன்னோடு சேர்ந்து சென்ற இடங்கள்
தனிமையில் கூட அழகாய் இருக்கின்றன
கனவுகளில் கூட நான் உன்னை
நினைப்பது இல்லை

கவலையோ கண்ணீரோ
வீட்டாரிடம் சொல்லத் தொடங்கி விட்டேன்
இப்போது செல்பிக்கு கூட
நண்பர்கள் இருக்கிறார்கள்
முகப்புத்தகத்தில் உன் அப்டேட்
பார்த்து கூட நாட்கள் ஆகி விட்டன
இப்போது கொஞ்சம் வேலைக்கும்
நேரம் ஒதுக்குகிறேன்
உன்னைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம்
கிடைப்பதில்லை

உனக்கு இனிமேலும் கவலை
வேண்டாம்
நம் இறந்த காலம் பற்றி
நான் இறந்தாலும்
சொல்லமாட்டேன்
உன் கணவனாகும் என் நண்பனிடம் ...........

எழுதியவர் : தமிழரிமா (5-Nov-17, 7:03 pm)
பார்வை : 1055

மேலே