தமிழரிமா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  தமிழரிமா
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  18-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Oct-2017
பார்த்தவர்கள்:  205
புள்ளி:  4

என் படைப்புகள்
தமிழரிமா செய்திகள்
தமிழரிமா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2017 10:45 am

பட்டு பாவாடை உடுத்தி
பருவப்பெண் செல்கின்றேன்
முழங்கால் வரை தெரியுது என்றீர்!

சரி புடவை தனை மூடி
புகழ்வாய் என செல்கின்றேன்
காற்றில் மாராப்பு விலகி
மெல்லிடை நெளியுது என்றீர்!

டி செர்ட்டும் டேனிமும்
என்று திடமாக செல்கின்றேன்
அங்கம் அப்படியே
நகல் காட்டுது என்றீர்!

அத்தனையும் மூடி
முக்காடிட்டு செல்கின்றேன்
என் கை கால் விரல் உன்னை
பாடாய் படுத்தீற்று என்றீர்!

ஒன்றுமே வேண்டாம்
வீட்டிலேயே இருக்கிறேன் என்றேன்
மங்கை காண மோகம்
மண்டைக்கு ஏறியது என்றீர்!

ஐயா பெரியோரே
அகிலத்தில் உயர்ந்தோரே
எப்படி நான் திரிந்தால்
உனை ஈன்றால் போல்
எனை பார்ப்பாய்!

அப்படி

மேலும்

குழந்தைக்கு பாலூட்டும் அன்னையின் மாராப்பை ஒளிந்து பார்க்கும் உலகம் இது நட்பே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 7:15 pm
தமிழரிமா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2017 4:39 pm

ஆயிரம் கால பயிரை சூடி
அழகாய் வாழ்ந்த மாது
ஆசைகொரு பெண் என்றும்
ஆஸ்திகொரு ஆண் என்றும்
சிசு இரண்டை தந்து விட்டு
மாரில் சன்னம் பாய
வீரமரணம் எய்த
வீரனின் மனைவிக்கு
விதவை எனும் பட்டம் ...

மறுமணம் ஏற்க என்னை
வீட்டார் அழைத்த போது
வேணாம் என்று சொல்ல
என் வீட்டார் வெறுத்த கதை
சொல்லி சொல்லி அழவே ஏலும்...

பெரிதாக படிக்கவில்லை
சொல்பேச்சும் கேட்க வில்லை
காதலன் சொல்கேட்டு
உறவுகளை மதிக்க வில்லை
அவன் போன பின்னும்
தன் மானம் தடுக்கிறது
காமன்சில் வேலை என
காலையில் செல்கின்றேன்
காம பார்வைகள் தாண்டி
என் வாழ்கையில் வெல்கின்றேன்..

புரிந்துணர்வு என்று சொல்லி
சில ப

மேலும்

கடந்து காலங்கள் வகுத்த சில நியதிகளை தூக்கி வீச வேண்டும் அது போல் நிகழ்காலம் வகுத்த பல நியதிகளை இன்றே குழி தோண்டி புதைக்க வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2017 7:38 pm
தமிழரிமா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2017 7:03 pm

என்னவளாய் இருந்தவளே
உனக்கொரு கவலை வேண்டாம்
உன் நினைவு என் இதய கடிகாரத்தில்
சற்றுத் தளர்ந்தே தான் ஓடுகிறது
உன்னை மறக்க தொடங்கி விட்டேன்

நாம் எடுத்த புகைப்படங்கள்
யாவும் புகையாகி விட்டன
உன் பெயரை யாரும் உச்சரிப்பின்
நான் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை
உன்னோடு சேர்ந்து சென்ற இடங்கள்
தனிமையில் கூட அழகாய் இருக்கின்றன
கனவுகளில் கூட நான் உன்னை
நினைப்பது இல்லை

கவலையோ கண்ணீரோ
வீட்டாரிடம் சொல்லத் தொடங்கி விட்டேன்
இப்போது செல்பிக்கு கூட
நண்பர்கள் இருக்கிறார்கள்
முகப்புத்தகத்தில் உன் அப்டேட்
பார்த்து கூட நாட்கள் ஆகி விட்டன
இப்போது கொஞ்சம் வேலைக்கும்
நேரம் ஒதுக்குகிறே

மேலும்

ஒவ்வொரு வார்த்தையும் நான் ரசித்தேன் என்பதை விட அனுபவித்து வாசித்தேன் என்பதே நிதற்சனம். தோழரே, தங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை. மிக மிக அருமை. தங்களின் அடுத்த படைப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.... 07-Nov-2017 10:13 am
இந்நிலைமை மட்டும் மண்ணில் யாருக்கும் வரக்கூடாது மிகவும் வேதனையானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2017 11:14 pm
தமிழரிமா - தமிழரிமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2017 11:44 am

அடியே
என் காதலை கெளரவ கொலை செய்ய சொன்ன கொலைகாரியே
ஆமடி பெண்ணே என் காதல் பேச்சிழந்த குழந்தை
அதை என்னால் கொல்ல முடியவில்லை
மறுவார்த்தை பேசா விடினும் மனதுக்குள் ஒன்றை கொண்டு செல்!

காமத்தில் நான் உன்னை தேடவில்லை
மோகம் முப்பதென அறிவேன் யான்...
உன் சொத்து பத்தில் பற்றில்லை எனக்கு
எந்நாளும் வாங்கி விட இயலும் இதை ...
உன் சாதி மதம் என்னை நெருங்க வைக்கவில்லை
இவ்விடமும் அவ்வகையே!
உன் அழகில் மயங்கவில்லை நான்
அகத்தில் அழகு என்று அறிந்தவனே யான்.
அறிவில் அடைய நினைக்கவில்லை
ஒருபடி மேல் எழும்பி நான்

காமமில்லை காசில்லை
சொத்தில்லை சுகமில்லை
சாதியில்லை மதமில்லை
அழகில்லை அறிவில்லை

மேலும்

எவனொருவன் தன் தாயை என்னொரு பெண்ணில் காண்கிறானோ அன்றே அவள் காரணமில்லாமல் அவனால் கைபிடிக்க படுகின்றாள் நானும் அவ்வகை மனித இனமே!!! இந்த வரிகள் சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை .. அருமை 26-Apr-2018 4:26 pm
வாழ்த்துக்கள் சகோ 06-Nov-2017 11:52 pm
போற்றுதற்குரிய காதல் இலக்கியம் புது காதல் வாழ்வியல் அனுபவங்கள் காதல் தெய்வங்களின் ஆசிகள் அகநாநூற்றுக் காதல் காவியம் தொடரட்டும் காதலர் ஏக்கம் காதல் வலி காதலர் கற்பனை காதல் வாழ்வியல் மேலாண்மைக் கருத்துக்கள் இது போல் காதல் இலக்கியம் படைக்க அன்புடன் இலக்கியவாதிகளை வேண்டுகிறேன் வள்ளுவன் வழி காண்போம் 03-Nov-2017 4:41 am
உன் அருகே நான் வாழ்வது வரம் என்றால் நீ என்னை உன் பிள்ளையாக ஏற்றுக்கொள்வது இறைவன் நாட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 6:54 pm

மேலும்...
கருத்துகள்

மேலே