பெண்ணின் மனு

பட்டு பாவாடை உடுத்தி
பருவப்பெண் செல்கின்றேன்
முழங்கால் வரை தெரியுது என்றீர்!

சரி புடவை தனை மூடி
புகழ்வாய் என செல்கின்றேன்
காற்றில் மாராப்பு விலகி
மெல்லிடை நெளியுது என்றீர்!

டி செர்ட்டும் டேனிமும்
என்று திடமாக செல்கின்றேன்
அங்கம் அப்படியே
நகல் காட்டுது என்றீர்!

அத்தனையும் மூடி
முக்காடிட்டு செல்கின்றேன்
என் கை கால் விரல் உன்னை
பாடாய் படுத்தீற்று என்றீர்!

ஒன்றுமே வேண்டாம்
வீட்டிலேயே இருக்கிறேன் என்றேன்
மங்கை காண மோகம்
மண்டைக்கு ஏறியது என்றீர்!

ஐயா பெரியோரே
அகிலத்தில் உயர்ந்தோரே
எப்படி நான் திரிந்தால்
உனை ஈன்றால் போல்
எனை பார்ப்பாய்!

அப்படி ஒரு உடையை
சிபாரிசு செய்
பயமில்லா பாவையாக
நான் என்வாழ்வில் பயணிக்க...!

எழுதியவர் : தமிழரிமா (7-Nov-17, 10:45 am)
Tanglish : pennin manu
பார்வை : 880

மேலே