உயர்வின் உன்னதம்

ஞானம் வேண்டி மோனத் தவமிருந்தாலும்,
மெளனம் காத்து தனித்திருந்தாலும்,
அஷ்டாங்க யோகா என அமர்ந்திருந்தாலும்,
மனம் நிலையாது தவித்திருந்தால் என்ன பயன்?

மனனங்கள் மந்திரங்கள் வேண்டாம்,
யாகங்கள், வேதங்கள் வேண்டாம்,
விரதங்கள் தியானங்கள் வேண்டாம்,
மனம் நிலைக்கும் பாதகங்கள் நினையாதிருத்தல் வேண்டும்.

நலம் தரும் சொல்லும், மாறாத வாக்கும்,
நேர்பட உரைத்திடும் உண்மையும்,
முகம் மாறி புறங்கூறாமையும்,
நம் செயலெனக் கொள்ளல் ,
உயர்வுக்கு வழியன்றோ!

எழுதியவர் : arsm1952 (7-Nov-17, 3:47 pm)
பார்வை : 358

மேலே