விதவை மனம்

ஆயிரம் கால பயிரை சூடி
அழகாய் வாழ்ந்த மாது
ஆசைகொரு பெண் என்றும்
ஆஸ்திகொரு ஆண் என்றும்
சிசு இரண்டை தந்து விட்டு
மாரில் சன்னம் பாய
வீரமரணம் எய்த
வீரனின் மனைவிக்கு
விதவை எனும் பட்டம் ...

மறுமணம் ஏற்க என்னை
வீட்டார் அழைத்த போது
வேணாம் என்று சொல்ல
என் வீட்டார் வெறுத்த கதை
சொல்லி சொல்லி அழவே ஏலும்...

பெரிதாக படிக்கவில்லை
சொல்பேச்சும் கேட்க வில்லை
காதலன் சொல்கேட்டு
உறவுகளை மதிக்க வில்லை
அவன் போன பின்னும்
தன் மானம் தடுக்கிறது
காமன்சில் வேலை என
காலையில் செல்கின்றேன்
காம பார்வைகள் தாண்டி
என் வாழ்கையில் வெல்கின்றேன்..

புரிந்துணர்வு என்று சொல்லி
சில பெருசுகள் ஆறுதல் சொல்ல
புணர்த்து உறவிட்கே என
பின்பு நான் விளங்கி கொல்ல
மங்கள விழாவிற்கு இந்த
மங்கையை ஏற்பதில்லை
அமங்கல வார்த்தை கூறி
என் மனதையும் நினைப்பதில்லை

மார்பையும் இடுப்பையுமாய்
அளவெடுக்கும் காம கோலம்
விலைமாது விட குறைவாக நோக்கும்
விரக்தியின் ஆழம்
அமங்கலி என்று என்னை
ஒதுக்கும் காலம்
அப்பா எங்கு என்று
பிள்ளைகள் கேக்கும் ஓலம்

நரம்பில்லா நாக்கால்
எதையும் கதைக்காதிர்
இளவிதைவை இவள் மனதை
அயலாரே உருக்காதிர்
மறுமணம் ஏற்பது தடையல்ல
என் மக்களை விரும்பி வரவேண்டும்
என் மார்பழகை அல்ல
அப்படி ஆண்மகன் வந்து விட்டால்
எந்த முகத்தில் என்னை முளிப்பீர் ............

எழுதியவர் : தமிழரிமா (6-Nov-17, 4:39 pm)
Tanglish : vithavai manam
பார்வை : 1341

மேலே