பிரியாத வரமொன்று வேண்டும்

அடியே
என் காதலை கெளரவ கொலை செய்ய சொன்ன கொலைகாரியே
ஆமடி பெண்ணே என் காதல் பேச்சிழந்த குழந்தை
அதை என்னால் கொல்ல முடியவில்லை
மறுவார்த்தை பேசா விடினும் மனதுக்குள் ஒன்றை கொண்டு செல்!

காமத்தில் நான் உன்னை தேடவில்லை
மோகம் முப்பதென அறிவேன் யான்...
உன் சொத்து பத்தில் பற்றில்லை எனக்கு
எந்நாளும் வாங்கி விட இயலும் இதை ...
உன் சாதி மதம் என்னை நெருங்க வைக்கவில்லை
இவ்விடமும் அவ்வகையே!
உன் அழகில் மயங்கவில்லை நான்
அகத்தில் அழகு என்று அறிந்தவனே யான்.
அறிவில் அடைய நினைக்கவில்லை
ஒருபடி மேல் எழும்பி நான்

காமமில்லை காசில்லை
சொத்தில்லை சுகமில்லை
சாதியில்லை மதமில்லை
அழகில்லை அறிவில்லை
பின் ஏன் என்று கேட்கிறாயா?
அதையும் அறிந்தே செல்...

எவனொருவன் தன் தாயை
என்னொரு பெண்ணில் காண்கிறானோ
அன்றே அவள்
காரணமில்லாமல் அவனால் கைபிடிக்க படுகின்றாள்
நானும் அவ்வகை மனித இனமே!!!

மறக்க முடியவில்லை
நினைக்க மனதுமில்லை
தாய் ஒருத்தி போல் நீயும் ஒருத்தியே
உன்னை பிரியாது வாழும் வரம் ஒன்று தந்தால்
என்றும் என் சாமியே!!!

எழுதியவர் : தமிழரிமா (2-Nov-17, 11:44 am)
பார்வை : 1750

மேலே