சாடல்

உன் கண்முன் தோன்றிய மறுகணமே என்மேல்
காதல் விசையினை கொண்டாயோ !!!
கண்ணி எந்தன் கரம்பிடிக்க
கற்பனை உன்னுள் சேர்த்தாயோ !!!!
கல்வி பாடம் அதை மறந்து
கனவில் நீயும் வாழ்வாயோ !!!!

செடியில் பூத்த முதல் பூவை
வண்டு சுற்றி வந்து தேனெடுக்கும் !!
பூவும் சற்று வாடியப்பின்
அடுத்த பூவின் ருசித்தேடும் !!!
தேனே அதன் உணவடா !
அது இன்றி வண்டும் வாழ்ந்திடுமோ ??

பெண்மை என்பது உணவல்ல ,
நீ மயங்கிட ருசித்திடும் மதுவல்ல !!
காலம் தொட்டு நாம் வாழ வெறும்
கண்கள் மட்டும் போதாது !
புரிதலில் காதலும் மலருமடா !
கருத்தொற்றுமை நம்முள் வேண்டுமடா !
விதையை முட்டி வெளியேறிய இளஞ்செடியே
உன் பருவம் வந்து பயிர் செய்யும்
சற்று நீயும் காத்தருளு !!

பெண்கள் நாங்களோ உயிர்களடா !!
உன் இசைக்கு அசைய பொம்மைகளா?
உன் மோக தீயணையைக்க என்னை
கொளுத்தும் தீயினில்
தள்ளிடும் எண்ணம் கொள்ளாதே !!
உன் அன்னையின் வளர்ப்பை மறவாதே !!

எழுதியவர் : திவ்யா சத்ய பிரகாஷ் (2-Nov-17, 8:58 am)
Tanglish : muthal parvai
பார்வை : 305

மேலே