SENTHILR - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SENTHILR |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : 16-Mar-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 0 |
உனை நினைத்து சிந்த கண்ணீரும் மீதம் இல்லை உனை நினைத்து கவிகள் வடிக்க எழுத்துக்களும் மீதம் இல்லை
உன் நினைவுகள் மட்டும் ரணமாய் இன்றும் என்னுள்........
என்னவளாய் இருந்தவளே
உனக்கொரு கவலை வேண்டாம்
உன் நினைவு என் இதய கடிகாரத்தில்
சற்றுத் தளர்ந்தே தான் ஓடுகிறது
உன்னை மறக்க தொடங்கி விட்டேன்
நாம் எடுத்த புகைப்படங்கள்
யாவும் புகையாகி விட்டன
உன் பெயரை யாரும் உச்சரிப்பின்
நான் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை
உன்னோடு சேர்ந்து சென்ற இடங்கள்
தனிமையில் கூட அழகாய் இருக்கின்றன
கனவுகளில் கூட நான் உன்னை
நினைப்பது இல்லை
கவலையோ கண்ணீரோ
வீட்டாரிடம் சொல்லத் தொடங்கி விட்டேன்
இப்போது செல்பிக்கு கூட
நண்பர்கள் இருக்கிறார்கள்
முகப்புத்தகத்தில் உன் அப்டேட்
பார்த்து கூட நாட்கள் ஆகி விட்டன
இப்போது கொஞ்சம் வேலைக்கும்
நேரம் ஒதுக்குகிறே
ஒருதலை காதல்....
உன்னை நினைக்காமல் ,
ஒரு நொடிக்கூட
என்னால் இருக்க முடியவில்லை....
ஆனால்,
ஒரு நொடிக்கூட
என்னைப்பற்றி
நினைக்க உன்னால் முடியவில்லை!!!!!
இங்கு கண்ணீரில் நான்...
அதனைக் கூட உணராமல் நீ!!!!
உன் கைகள் கோர்த்து நடந்திட கனா கண்டேனடா...........
கண் விழித்து பார்க்கையில் அருகில் நீ.........
உனை பார்த்தவுடன் என் கரங்கள் உனை தேடி வந்ததடா............
உன் கரங்களால் இறுக பற்றி கொண்டாய்..............
அந்த நொடியே இறந்து போனேன்
உன் கரங்கள் தேடியது உன்னை உயிராக நேசித்த என் அன்பான கரங்களை அல்ல வேறெரு அழகான கரங்களை..............
இன்றும் காத்திருக்கிறேன் உன் கரங்கள் கோர்த்து நடந்திட.........
வாழ்க்கை முழுவதும் பயணித்திட இல்லை
என் இறுதி நிமிடத்தில் உன் நினைவுகளுடன் கல்லறை பயணத்திற்காக.................